உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிமுக, திமுக ஆட்சியை ஒப்பிட்டு பாருங்கள்: இபிஎஸ் பேச்சு

அதிமுக, திமுக ஆட்சியை ஒப்பிட்டு பாருங்கள்: இபிஎஸ் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை : '' அதிமுக, திமுக ஆட்சியை ஒப்பிட்டு அதில் எது சிறந்தது என மக்கள் முடிவு செய்ய வேண்டும்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.தமிழகம் முழுவதும், 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ் கலசபாக்கம் பகுதியில் பேசியதாவது: மக்கள்தான் எஜமானர்கள், தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்கள். தமிழகத்தில் அதிமுக ஆட்சியையும் திமுக ஆட்சியையும் ஒப்பிட்டு, எது சிறந்தது என்று முடிவுசெய்து 2026 தேர்தலில் முடிவை வழங்குங்கள். அதிமுக ஆட்சி மக்களாட்சி, திமுக குடும்ப ஆட்சி. மக்களுக்காக திட்டம் தீட்டினோம், திமுக குடும்பத்துக்காக திட்டம் போட்டு கோடிகோடியாகக் கொள்ளையடிக்கிறது. தமிழகம் முழுவதும் போதைப் பொருள் சகஜமாகிவிட்டது. இளைஞர்கள் சீரழிவதால் குடும்பங்கள் அழிகிறது. எல்லா துறையிலும் ஊழல் நடக்கிறது. பணம் கொடுக்காமல் எதுவும் நடக்காது.யாரெல்லாம் கப்பம் கட்டுகிறார்களோ, அவர்களை எல்லாம் சிறந்த அமைச்சர் என்று பட்டம் சூட்டுகிறார். சிறந்த நிர்வாகம் செய்பவர்களுக்குப் பட்டம் கிடையாது, துட்டு அதிகமாகக் கொடுப்பவர்தான் சிறந்த அமைச்சர். எல்லா அரசிலும் நிர்வாகத் திறமைமிக்க அமைச்சர்களுக்கே மதிப்பு. ஆனால், திமுக ஆட்சியில் கப்பம் கட்டுபவர்களுக்குத்தான் நல்ல இலாகா உண்டு. இன்று அதிமுகவில் இருந்துதான் பல பேர் அமைச்சர்களாக டெபுடேஷனில் திமுகவுக்கு போயிருக்கிறார்கள். அதிமுகவைச் சேர்ந்த 8 பேர் திமுக அமைச்சரவையில் உள்ளனர். பலர் எம்.எல்.ஏ . ஆகியிருக்கிறார்கள். இவர்கள் சரியான முறையில் மாமுல் வாங்கி மேலிடத்துக்கு கொடுக்கிறார்கள். அதனால் திமுகவுக்கு உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டுவிட்டனர். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

pmsamy
ஆக 19, 2025 07:21

அதிமுக ஆட்சியின் ஊழல்களை நினைத்தால்.....


M Ramachandran
ஆக 19, 2025 03:45

ஆ மு கா வென்றால் ஜெயலலிதா அம்மையாருடன் முடிந்தது உன்னையெல்லாம் யாரும் ஆஅ திமு க்கா என்று நினையப்பதில்லைய சிறிது நாள் உட்கார வைத்ததிலேயே தில்லு முள்ளு கொடநாடு கேஆசு என்று மாட்டி இருக்கிறாய் உன் சிந்து ஸ் டாலின் கையில்.நினைத்திருந்தால் புழலில் உட்கார்ந்திருப்பாய். அதெல்லாம் யாருக்கும் தெரியாது என்று ஆட்டமும் போராடாதெ. இது உனக்கு கடையசி தேர்தல்.முடிந்தது உன் கிராமம் நோக்கிய அடித்த கொல்லையய பணத்துடன் செட்டிலாக வேண்டிஅனிர்பதம் யேற்படும். இனி ஊர்ந்து சென்று வேஷ்டி புடவைய அடியில் ஒளிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் கிடையாது யேனெனில் உன் நம்பிக்கையயை துரோகத்திற்கு பலன் கிடைத்து சொந்த ஊர் நோக்கி கடைய்யசி பயணம்


M Ramachandran
ஆக 19, 2025 03:39

பழனி ஒரு வெத்து வேட்டு. சினிமாவில் கமல்க்கூறும் வசனம் நின்னா பயம் உட்கார்ந்தா பயம் யாரையாவது ஸ்டாலின் என்று சொன்னாலே நடுக்கம் பார்த்தால்பயம் அதுவும் அண்ணாமலை என்று பெயரை கேட்டாலே பயம் . உனக்கெல்லாம் எண்ணத்திற்கு அரசியல். நேராணா வழியில் செல்ல தயக்கம். ஆனால் குழி தோண்டி பிழைய்ப்பு நடத்த மட்டும் ஆசை.நீ ஒரு நம்பிக்கை துரோகி. அது தெரிந்து தான் விரோதியை நம்பலாம் ஆனால் துரோகியை கண்டால் தூர விலகு என்று ஆரம்ப முதல் உன்னை அளந்து வைத்திருக்கிறார். ஸ் டாலின் உன் மண்டையில் ஓங்கி தட்டுவார். அதோட உன் அரசியல் வாழ்வு முடிவு அடையும். திருடனுக்குள் எழுதாத சில சட்ட திட்டங்கள் உண்டு. அதை மதிக்க வில்லையென்றால் உயிர் நிலைய்க்காது. நீ மத்திய அரசைய்ய விரோதித்து கொண்டு ஒன்னும் செய்ய இயலாது. அப்போது தெரியும் நீ ஓடி ஒளிந்து கொள்வது.


Anantharaman Srinivasan
ஆக 19, 2025 00:23

அதிமுக, திமுக இரண்டுமே காமராஜர் சொன்னதுபோல் ஊழலில் திளைக்கும் மட்டைகள்.


ManiMurugan Murugan
ஆக 18, 2025 23:00

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் விளம்ர மோக கட்சி தி மு கா கூட்டணியின் 4 வருட தூக்கம் தேர்தல் வரும் என்பதால் ஒட்டு க்கு ஒப் பாரி திரை கதை வசனம் நாடகம் போ டு வதை நன்கு அறிவார்கள் மக்கள் 91/2 லட்சம் கோடி கடன் அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி சம்பளம் கொடுக்க முடியாமல் துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர் களாக மாற்றம் என்பவர்கள் புது திட்டம் என்று திரை கதை வசனம் நாடகம் போடுவது அவர்கள் காதில் அவர்களே பூ வைத்துக் கொள்வது


Oviya Vijay
ஆக 18, 2025 22:39

தினமும் பரப்புரை முடிந்ததும் தனக்கு கூடும் கூட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு இரவு தூங்கும் போது 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக அமைந்து விடும். மீண்டும் அரியணையில் ஏறி விடலாம் என்ற கனவில் மிதந்து கொண்டிருப்பாரென நினைக்கிறேன்... ஆனால் இவர் ஜெயிப்பதற்க்கான அறிகுறி எங்குமே தென்படவில்லை... தேர்தல் முடிவு வந்ததும் மிகப்பெரிய அதிர்ச்சியை இவர் மனம் தாங்குமா எனத் தெரியவில்லை... ஏனெனில் ஏற்கனவே 11 தோல்வி பழனிச்சாமி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்துக் கொண்டுள்ளனர்... அதிலே இன்னும் ஒன்று சேருமானால் என்னவாகும்...


Ramesh A
ஆக 18, 2025 22:13

ஒப்பிட்டு அப்புறம் பாக்கிறோம் முதலில் உப்பு போட்டு சாப்பிடுங்க


திகழ்ஓவியன்
ஆக 18, 2025 21:13

அய்யா அப்போது நீங்கள் மாதா மாதம் MLA க்கு பணம் கொடுத்து ஆட்சியை காப்பாற்றி கொண்டு இருந்தீர் , உங்கள் ஆட்சி கூவத்தூரில் சசிகலா காலில் விழுந்து வந்தது , இன்று நீங்கள் லிப்ஸ்டிக் போட்ட பஸ் இல் மக்கள் இலவச பயணம் , மகளிர் உரிமை தொகை 1000 மாதா மாதம் , பெண் பிள்ளை படிக்கச் 1000 , தவப்புதல்வன் 1000 முதியோர் உதவி தொகை 1500 இப்படி எல்லாம் இப்போ வாங்கி கொண்டு இருக்கிறார்கள் அப்போ இது எல்லாம் இல்லையே


m.arunachalam
ஆக 19, 2025 01:11

இந்த இலவச தொகைகள் எப்படி மற்றும் ஏன் கொடுக்கப்படுகிறது?. பாரபட்சமில்லாமல் இதை அலசினால் வேறு விதமாக இருக்கும். தெளிதல் நலம் .


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 18, 2025 20:50

அப்போ குனிஞ்சு கீழே பாத்துக்கிட்டு இருந்தாங்க, இப்போ நிமிர்ந்து நேரா பாக்குறாங்க


புதிய வீடியோ