உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு

11 பேர் உயிரை பறித்த வெற்றிக் கொண்டாட்டம்: கோலி மீது பதிவானது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 11 பேரை பலி வாங்கிய வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, கோலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி முதல் முறையாக வென்றிருக்கிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை தம் வசப்படுத்தி இருக்கிறது. இந்த வரலாற்று வெற்றியை கொண்டாடும் வகையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் திரளான கூட்டம் கூடியது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து பெங்களூரு அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், வெற்றி கொண்டாட்ட ஏற்பாட்டாளர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவானது. இதே சமயத்தில் கூட்ட நெரிசலுக்கு விராட் கோலியும் ஒரு வகையில் காரணமாக இருந்திருக்கிறார், எனவே அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என்று சமூக ஆர்வலர் வெங்கடேஷ் என்பவர் கப்பன் பார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்து இருந்தார். ஐபிஎல் போட்டி மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டார், அவரின் தூண்டுதலின் பேரில் தான் மிக பெரும் கூட்டம் கூடியது என்று அதில் கூறப்பட்டு இருந்தது. தற்போது கூட்ட நெரிசலுக்கும், கோலிக்கும் தொடர்பு இருப்பதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது கோலி, மனைவி அனுஷ்காவுடன் லண்டனில் உள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர், பொருளாளர் ஆகிய இருவரும் தாங்களாகவே முன் வந்து தங்கள் பதவிகளில் இருந்து விலகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

RAMESH
ஜூன் 09, 2025 03:47

புஷ்பா 2 சிறப்பு காட்சி அன்று கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழந்தார்...கைது செய்தனர் அல்லு அர்ஜுனை...அதே போல் இப்போதும் நடக்க வேண்டும்


spr
ஜூன் 08, 2025 07:50

இந்த இனத்துக்கு காரணம் கூட்ட நெரிசலைச் சமாளிக்க ஏற்ற கட்டமைப்பு இல்லாமை , முதலுதவி கொடுக்க ஏற்ற மருத்துவ வசதியின்மை, கூடியிருந்த மக்களின் மூடத்தனம் மற்றும் அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய காவற் துறை. விழாவை நிறுத்த வேண்டுமென்றால், அரங்கத்தினுள்ளே விழா நடத்துவோருக்கு வெளியில் நடப்பது எப்படித் தெரிய வரும்? இதையெல்லாம் ஒரு வழக்கென்று ஏற்கும் நீதிமன்றமும் சற்று சிந்திக்க வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 07, 2025 21:31

கோலியும் மற்ற வீரர்களும் என்ன தவறு செய்தார்கள். தவறு செய்தது மாநில அரசு. மாநில முதல்வர், துணை முதல்வர் மற்றும் வெற்றிகொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்.


Kanakala Subbudu
ஜூன் 07, 2025 18:41

விளையாட்டு வீரர்கள் மீது வழக்கு என்பது சரியில்லை. அரசு பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கும் என்பதனால் தான் இப்படிப்பட்ட விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். அரசின் கேவலமான திட்டமிடலால் நடந்த சம்பவம். அந்த சமயத்திலும் விழாவை நடத்தியது அராஜகம்


angbu ganesh
ஜூன் 07, 2025 17:51

கோலி தோனி போன்ற லெஜண்ட் பார்த்து கத்துக்கோங்க ஒரு வெற்றிக்கே இவ்ளோ ஆர்ப்பாட்டம். அவர் எத்தனை பார்த்திருக்கார் இந்த மாதிரி .நீங்க எல்லாம் அவர் முன் ஒண்ணுமே இல்ல


என்றும் இந்தியன்
ஜூன் 07, 2025 17:31

பாதுகாப்பு நடவடிக்கை சரியாக கவனிக்கப்படவில்லை என்று அந்த மாநிலத்தின் முதன்மந்திரி மீது கூட வழக்கு பதிவு செய்யப்படவேண்டும். அந்த ஊர் தலைமை போலீஸ் அதிகாரி மீது கூட வழக்கு பதியப்பட வேண்டும். அவருடைய பொறுப்பற்றதனத்தினால் தான் 11 பேர் இறந்தனர் என்று சொல்லி...


vbs manian
ஜூன் 07, 2025 17:15

சரியோ தவறோ தெரியாது. ஹைதராபாத் சினிமா அரங்கில் ஏற்பட்ட சோகத்துக்கு நடிகர் கைது செய்யப்பட்டார்.


Kulandai kannan
ஜூன் 07, 2025 16:41

நம் காவல்துறையும், நீதித்துறையும் கேலிக்குள்ளாவது இது போன்ற விஷயங்களால் தான். இந்த விழா வேண்டுமென்று கோலி கேட்டாரா? கேடு கெட்ட அரசியல்வாதிகளின் ஃபோட்டோ ஆசையால் வந்த வினை இது.


m.arunachalam
ஜூன் 07, 2025 16:07

கூட்டம் , கொண்டாட்டங்களுக்கு செலவு செய்ய வேறு இடத்தில் சுரண்டுவார்கள் . இது ஒரு மோசடி விளையாட்டு என்ற எண்ணம் வலுத்துவிட்டது . வீரர்கள் பிராயச்சித்தம் செய்வது நலம் .


ஆரூர் ரங்
ஜூன் 07, 2025 14:16

சென்னை விமான சாகச காட்சி நடந்த நேரத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்துகளுக்கு அவ்விமானங்களைத் தயாரித்த ரஷ்யாவின் அதிபர் புதின் மீது இப்போது கூட வழக்கு பதியலாம்.


m.arunachalam
ஜூன் 07, 2025 16:01

அங்கு மேட்ச் பிக்சிங் சந்தேகம் ஏற்பட்டதா / பேசப்பட்டதா ?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை