உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்சோ வழக்கில் கைதான பெண்ணுக்கு நிபந்தனை ஜாமின்

போக்சோ வழக்கில் கைதான பெண்ணுக்கு நிபந்தனை ஜாமின்

புதுடில்லி:போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு, விடுமுறை கால அமர்வு, இரண்டு வாரங்கள் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.போக்சோ எனும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரின் தந்தை இறந்து விட்டதால், தனக்கு ஜாமின் வழங்க கோரி, விடுமுறை கால சிறப்பு நீதிபதி பிரதீபா எம் சிங் முன், மனு தாக்கல் செய்திருந்தார்.போக்சோ வழக்கில் அந்த பெண் கைது செய்யப்பட்டிருந்ததால், அவரின் தந்தை தான் இறந்தாரா என விசாரணை நடத்திய நீதிபதி, அந்த பெண்ணுக்கு இரண்டு வாரங்கள் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.அந்த நிபந்தனைகளில், அந்த பெண், தன் சொந்த கிராமத்தில் உள்ள வீட்டுக்கு மட்டுமே செல்ல வேண்டும்; தினம்தோறும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்; அவரின் மொபைல் போனை எப்போதும் தொடர்பு கொள்ள வசதியாக வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேலும், அந்த பெண், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த பெண் மீதான போக்சோ வழக்கில் குற்றங்களை ஊர்ஜிதப்படுத்தியுள்ள நீதிமன்றம், அவருக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.அந்த பெண் மீது போக்சோ வழக்கு தொடரப்படும் அளவுக்கு, அவர் எத்தகைய குற்றங்களை செய்தார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை