உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் தோல்வியால் ஆட்டம் காணும் அஜித் பவார் கட்சி

தேர்தல் தோல்வியால் ஆட்டம் காணும் அஜித் பவார் கட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: லோக்சபா தேர்தல் தோல்வியால், மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 15 பேர் சரத்பவாருடன் தொடர்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்த அஜித்பவார் சில எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ., அணியில் இணைந்தார். அதில், அஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் தே.ஜ., கூட்டணி தோல்வி அடைந்தது. 4 தொகுதிகளில் போட்டியிட்ட அஜித்பவார் தரப்பு ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து களமிறங்கிய அஜித் பவாரின் மனைவி படுதோல்வியை சந்தித்தார். சரத்பவார் தரப்பில் 8 எம்.பி.,க்கள் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தோல்வி காரணமாக அஜித்பவார் தலைமையிலான கட்சியில் குழப்பம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 15 எம்.எல்.ஏ.,க்கள் சரத்பவாருடன் தொடர்பில் உள்ளதாகவும், அவரது அணிக்கு செல்ல விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அவர்களை ஏற்றுக் கொள்வது குறித்து சரத்பவார் தான் முடிவு செய்ய வேண்டும் என சரத்பவாரின் ஆதரவாளரான ஜெயந்த் பாட்டீல் கூறியுள்ளார்.குழப்பம் எழுந்துள்ள நிலையில், அஜித்பவார், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தாமரை மலர்கிறது
ஜூன் 06, 2024 19:47

மஹாராஷ்டிராவில் ஷிண்டே ஆட்சிக்கு ஆபத்து வந்துள்ளது. பாட்னவிஸ் முதல்வர் ஆனால், பிஜேபி ஆட்சி காப்பாற்றப்படும்.


தமிழ்
ஜூன் 06, 2024 16:22

என்ன வகையான அரசியலோ.


Narayanan Muthu
ஜூன் 06, 2024 19:01

ஆயா ராம் காயா ராம் அரசியல். மோடியால் உடைக்கப்பட்ட மோடி ஆதரவு கட்சிகள் அழிந்து போவதுதான் வரலாறு.


ஜெயஸ்ரீ
ஜூன் 06, 2024 15:43

இவன் துரோகம்செய்யாத ஆளுங்களே இல்லை. அப்பா, அம்மா, மாமா, தாத்தான்னு எல்லோருக்கும் துரோகம் செய்தது வருத்தம் அளிக்கிறது.


MARUTHU PANDIAR
ஜூன் 06, 2024 15:36

வேறென்ன ,,திரும்பவும் பெரியப்பா/சித்தப்பா சரத்துடன் தான் ஐக்கியம் ஆகப்போறாப்ல இந்த ++++பா.ஜ செய்த மிகப் பெரிய ......ள் தனம் சிவசேனாக் கட்சி ஷிண்டே மூலம் பிளவு பட்ட போது மஹாராஷ்டிரா அரசியலில் மூக்கை நுழைத்தது தான் +++++பேசாமல் எட்டி இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அந்த அரசு தானே கவிழ்ந்திருக்கும் ++ +6 மாதத்தில் தேர்தல்.+++++அப்போது பா .ஜ மக்கள் ஆதரவை கணிசமாக பெற்று அரசு அமைத்திருக்கும் வாய்ப்பு பெற்றிருக்கும் .தற்போது கணிசமான அளவில் எம்.பிக்கள் கிடைத்திருப்பர் .இப்போ வடை போச்சே கதை தான் .


Narayanan Muthu
ஜூன் 06, 2024 19:07

சிவசேனா கட்சியை ஷிண்டேவை வைத்து உடைத்ததே மோடியின் பாஜகதான்என்பதை வசதியாக மறந்து விட்டீர்கள் போலெ. அந்த அரசை கவிழ்க்க பாஜக அரங்கேற்றிய நாடகம் தான் ஷிண்டே சிவசேனா. அஜித்பவாருக்கு நடந்த கதி ஷிண்டேவுக்கும் கூடிய விரைவில் நடக்கும். வரும் மஹாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் போது இதை கண்கூடாக காணலாம்.


Anantharaman Srinivasan
ஜூன் 06, 2024 15:03

இதே வேலையா போச்சு. ஒருவனின் தனிப்பட்ட ஆதாயமே கட்சி நிலை என்றாகி விட்டது. நாடு உருப்படும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி