உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலுக்காக அமெரிக்கா கொடுத்த நிதி; வாங்கியது யார்: காங்., - பா.ஜ., மோதல்

தேர்தலுக்காக அமெரிக்கா கொடுத்த நிதி; வாங்கியது யார்: காங்., - பா.ஜ., மோதல்

புதுடில்லி : இந்திய தேர்தலில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வரும், 182 கோடி ரூபாய் நிதியை நிறுத்துவதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா அறிவித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o65lafgk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, இந்திய தேர்தல்களில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என, கேள்வி எழுப்பிய பா.ஜ., இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியை குற்றஞ்சாட்டியது. இது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது.

பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாள்வியா கூறியதாவது:

இந்திய ஜனநாயகத்தில் வெளிநாடுகள் ஊடுருவுவது திட்டமிட்டு நடக்கிறது. சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் தொண்டு நிறுவனம் வாயிலாகவே, இந்தியாவுக்குள் இந்த பணம் வந்துள்ளது. கடந்த 2012ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, சோரஸின் தொண்டு நிறுவனத்துடன் தலைமை தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் செய்தது.இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடியின் ஆலோசகரான சஞ்சீவ் சன்யால், ''ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அமெரிக்கா அனுப்பிய பணத்தை இந்தியாவில் பெற்றவர் யார் என, தெரிய வேண்டும். வரலாற்றில் இதுவரை இல்லாத பெரிய முறைகேடு இது,'' என்றார். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா நேற்று கூறுகையில், ''மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது, யு.எஸ்.ஏ.ஐ.டி., நிதியை தலைமை தேர்தல் கமிஷன் வாங்கியதாக கூறுகின்றனர்; வெளிநாட்டு சக்திகளிடம் பணத்தைப் பெற்று, தேர்தல் நடைமுறைகளை காங்கிரஸ் சீரழித்தது என்கின்றனர். ''ஆனால், 2014 தேர்தலில் பா.ஜ., ஆட்சியை பிடித்தது எப்படி? சோரஸ் வாயிலாக அமெரிக்க நிதியை பா.ஜ.,வினர் பெற்றனர் என எடுத்துக் கொள்ளலாமா,'' என்றார்.

'மாஜி' தேர்தல் கமிஷனர் விளக்கம்

சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் உடன், தலைமை தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படும் 2012ல் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர், எஸ்.ஒய்.குரேஷி. அவர், அளித்துள்ள விளக்கத்தில், ''என் பதவிக்காலத்தில் தலைமை தேர்தல் கமிஷனுக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வந்ததாக வெளியாகும் தகவல், துளி கூட உண்மையல்ல. ''சர்வதேச தேர்தல் அமைப்புகளுக்கான அறக்கட்டளையுடன் தலைமை தேர்தல் கமிஷன், 2012ல், ஒப்பந்தம் செய்தது உண்மை. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் எந்தவித நிதி உதவியோ அல்லது அது பற்றிய உறுதி மொழியோ கிடையாது. தேர்தல் பணிகள் தொடர்பான பயிற்சிக்காக பிற தேர்தல் அமைப்புகளுடன் இதுபோன்ற ஒப்பந்தம் போடுவது வழக்கம்,” என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

jayvee
பிப் 18, 2025 11:54

182 கோடி எப்படி எந்த வங்கிக்கணக்கிற்கு சென்றதை பிஜேபி கண்டறியமுடியாதா ? பிஜேபி அடுத்த காங்கிரஸ் திமுகவாக மாறி பல வருடங்களாகிவிட்டது ..தேர்தல் இலவசங்கள் கார்பொரேட் கம்பெனிகளிடம் தேர்தல் மற்றும் கட்சி நிதி பெறுதல் என்று தரம் குறைந்துவிட்டது என்பதுதான் உண்மை


நிக்கோல்தாம்சன்
பிப் 18, 2025 09:26

செல்வப்பெருந்தகை பெயரிலேயே லண்டன் செல்வம் இருக்கே


Anbuselvan
பிப் 18, 2025 08:33

இதுதான் வோட்டு போட கொடுக்கப்பட்ட காசா? அப்போ திருமங்கலம் தேர்தலிலிருந்து பக்கத்தை திருப்பி ஆகா வேண்டும்


Nandakumar Naidu.
பிப் 18, 2025 08:27

மூளை இல்லாத பவன் கேஹெரா வே, 2014 ல் தேச, சமூக மற்றும் ஹிந்து விரோதிகளாகிய உங்களை மக்கள்.தூக்கி குப்பையில் வீசினார்கள். அதனால் தான் பிஜேபி வென்றது.


K Subramanian
பிப் 18, 2025 12:03

even now BJP is winning for 3rd time and why only 2014 when u were thrown out. this pawan khera is nothing less than a terrorist.


Dharmavaan
பிப் 18, 2025 08:05

குரேஷி ரூ முஸ்லீம் இந்த உண்மையை அவனிடம் எதிர்பார்க்க முடியாது


ஜாமன்பாய்
பிப் 18, 2025 08:01

அடப்பாவிங்களா... எலான் மஸ்க் போன வருசம் வரை அளிக்கப் பட்ட நிதியுதவியைத்தான் ரத்து செய்திருக்கிறார். இத்தனை வருசம் வாங்கி துண்ணுட்டு 2012 கணக்கை தூசி தட்டுறீங்களே...


அப்பாவி
பிப் 18, 2025 07:58

அமெரிக்க நிதி டாலரில் வரும். அது ஒன்றிய அரசு அனுமதியில்லாமல் யாரும் ரூவாயா மாற்றமுடியாது. எனக்கு தெரிஞ்சவரை ஆளும் கட்சிதான் அடிச்சிருக்கணும். காங்கிரசுக்கு போவதாக இருந்தால் அமெரிக்காவிற்கே திருப்பி அனுப்பியிருப்பார்கள்.


Srinivasan Krishnamoorthy
பிப் 18, 2025 09:22

it has happened in 2014. Congress was in power.. your querishi was EC


Srinivasan Krishnamoorthy
பிப் 18, 2025 09:27

See the period. 2012 Congress was ruling Querishi was the EC.. What a shame EC and Sores had an agreement.. congress has 100 ways to loot


Srinivasan Krishnamoorthy
பிப் 18, 2025 09:27

See the period. 2012 Congress was ruling Querishi was the EC.. What a shame EC and Sores had an agreement.. congress has 100 ways to loot


visu
பிப் 18, 2025 10:02

இதுதான் முரட்டு முட்டு என்பது அது நடந்தது 2012 இல் அப்ப ஆட்சில இருந்தது காங்கிரஸ் அதனால பாதி சரியா சொல்லிட்டு அப்புறம் முட்டு கொடுத்திடீங்க


sankaranarayanan
பிப் 18, 2025 07:56

என்றாவது ஒருநாள் காங்கிரசு செய்த அட்டூழியங்கள் வெளிவரத்தான் போகின்றன இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கின்றன முழுவதும் வந்தவுடன் கட்சிக்கு சமாதி கட்டியாகிவிடும்


Ray
பிப் 18, 2025 10:49

இது பிஜேபி க்கும் பொருந்தும் ஹிட்லர் சதாம் உசேன் கடைசி நாள் பற்றி தெரிந்து கொள்வது நல்லதுப்பா சதாமை வைத்து மத்திய கிழக்கு நாடுகளை மிரட்டிய அதே அமெரிக்காதான் புகைபோட்டு எலி வளையிலிருந்து வெளிக் கொண்டு வந்தது சரித்திரம் திரும்பும் நினைவிருக்கட்டும்


RAJ
பிப் 18, 2025 06:55

அட காங்கிரஸ் ....பன்னாடைகளா......


சமீபத்திய செய்தி