உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., - எம்.பி., மனைவியின் பாக்., தொடர்பு குறித்து விசாரணை

காங்., - எம்.பி., மனைவியின் பாக்., தொடர்பு குறித்து விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி: ''காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவர் கவுரவ் கோகோய் மனைவி எலிசபெத்துக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்படும்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.காங்கிரசைச் சேர்ந்த கவுரவ் கோகோய், லோக்சபா எதிர்க்கட்சி துணைத் தலைவராக உள்ளார். இவருடைய தந்தை தருண் கோகோய், அசாம் முதல்வராக இருந்தவர். கவுரவ் கோகோய், ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிறந்த எலிசபெத் கோல்பர்னை, 2013ல் திருமணம் செய்தார். எலிசபெத் கோல்பர்னுக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., உடன் தொடர்பு இருப்பதாக, பா.ஜ., மூத்த தலைவர் அஜய் அலோக் குற்றஞ்சாட்டினார்.இது குறித்து பா.ஜ.,வைச் சேர்ந்த, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று கூறியதாவது:இது வெறும் அரசியல் குற்றச்சாட்டு அல்ல. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது. பாகிஸ்தான் உளவு அமைப்புடன், முன்னாள் முதல்வரின் மருமகளுக்கு தொடர்பு இருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.எலிசபெத் கோல்பர்ன், பாகிஸ்தானுக்கு பலமுறை சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கவுரவ் கோகோய் அதுபோல் சென்றுள்ளாரா என்பதை விசாரிக்க வேண்டியுள்ளது. இதைத் தவிர, தருண் கோகோய் முதல்வராக இருந்தபோது, ஆட்சியில், ஐ.எஸ்.ஐ.,யின் ஆதிக்கம், தொடர்பு இருந்ததா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால், இது தொடர்பாக முறையாகவும், தீவிரமாகவும் விசாரிக்கப்பட வேண்டும். அதற்காக, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
பிப் 16, 2025 12:14

இனம் இனத்தோடு சேர்ந்து கும்மியடிக்கிறது


M Ramachandran
பிப் 16, 2025 11:54

ராகுலை போல் தானா அந்த கட்சியில் உள்ளவார்களும் என்ன ஒற்றுமையை இந்த விஷயத்தில்.


Barakat Ali
பிப் 16, 2025 07:52

தொடர்பு உண்மை... கடந்த பத்தாண்டுகளாக மட்டுமே கோடரிக்காம்புகள் வெளிப்படுகிறார்கள் .....


Kasimani Baskaran
பிப் 16, 2025 06:46

என் ஐ ஏ விடம் விட்டு விசாரிக்கச்சொல்ல வேண்டும். புழுவெல்லாம் வேலைக்கு ஆகாது.


J.V. Iyer
பிப் 16, 2025 05:17

இவர்கள் எல்லோரும் ஆதாரத்தை அழிப்பதில்தான் வல்லவர்கள்தானே? திராவிஷம் எல்லோரையும் இப்படி ஆக்கி இருக்கிறது. யாரும் கண்டு பிடிக்கமுடியாமல்தான் எல்லா குற்றங்களும் செய்வார்கள்.


புதிய வீடியோ