உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதாகரை எதிர்த்து போட்டி காங்., - எம்.எல்.ஏ., சவால்

சுதாகரை எதிர்த்து போட்டி காங்., - எம்.எல்.ஏ., சவால்

சிக்கபல்லாபூர்: “சிக்கபல்லாபூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., சார்பில் முன்னாள் அமைச்சர் சுதாகர் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நானே களமிறங்குவேன்,” என, காங்., - எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் சவால் விடுத்துள்ளார்.சிக்கபல்லாபூரில் நேற்று அவர் கூறியதாவது:சிக்கபல்லாபூர் தொகுதிக்கு, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, எம்.எல்.சி., ரவி, பாலாஜி உட்பட, சிலரின் பெயர் கூறப்படுகிறது. மேலிடம் யாருக்கு சீட் கொடுத்தாலும், அவரது வெற்றிக்காக உழைப்பேன்.நானும், தொண்டர்களும் கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். தலைவர்களின் உத்தரவை பின்பற்றுவோம். இம்முறை பா.ஜ., வேட்பாளராக சுதாகர் போட்டியிட வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் எனக்கு சீட் வழங்கும்படி, காங்., தலைவர்களிடம் கோருவேன். நானே வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.எம்.பி., பிரதாப் சிம்ஹா, ஒரு முட்டாள். அயோக்கியன். அரசியலில் 40, 50 ஆண்டுகள் அனுபவம் உள்ள முதல்வர் சித்தராமையாவை பற்றி, வாய்க்கு வந்தபடி பேசுகிறார். பிரதாப் சிம்ஹா நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். அவர் பேசுவதை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை