உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு

எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜ, அக்கட்சி எதிரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளது.மீடியாக்களில் வெளியான தகவலை வைத்து காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், '' இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யா, பாகிஸ்தானுக்கு சீன வழங்கிய போர் விமானங்களுக்கு இன்ஜீன்களை சப்ளை செய்வது ஏன் ,'' என கேட்டு இருந்தார்.இது தொடர்பாக பாஜவின் அமித் மாளவியா, '' இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ள தகவலை மேற்கோள் காட்டியதுடன், அதிகாரப்பூர்வமாக தகவல் இல்லை. உறுதியான தகவல் இல்லை. காங்கிரஸ் எம்பி இந்தியாவுடன் நிற்பதற்கு பதிலாக எதிரியின் பக்கம் சாய்வதை தேர்வு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

K V Ramadoss
அக் 05, 2025 21:03

ஜெய்ராம் ரமேஷ், தான் இருப்பதை அடிக்கடி காட்டிக்கொள்வார்...


தமிழ்வேள்
அக் 05, 2025 20:16

பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஐ அழிப்பதற்கு முன்னால் இந்த திருட்டு தேசதுரோகி காங்கிரஸ் கட்சியின் கடைசி வேர் கூட இல்லாமல் அழித்து ஒழிக்க வேண்டும்.. காங்கிரஸ் உள்ளவரை பாக்கிஸ்தான் பங்களாதேஷ் அழியாது..


Rathna
அக் 05, 2025 19:33

தொப்புள் கொடி உறவே


பேசும் தமிழன்
அக் 05, 2025 17:32

கான் கிராஸ் கட்சியை சேர்ந்த இவர் தான் ஜல்லிக்கட்டு தடை செய்த புண்ணியவான்..... அதற்க்கு திமுக உடந்தை..... மோடி அவர்கள் ஆட்சியில் அந்த தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடக்க காரணமாக இருந்தது பிஜேபி ஆட்சி.


பேசும் தமிழன்
அக் 05, 2025 17:29

அவர்கள் (கான் கிராஸ்) எப்போதும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்கள்..... அவர்கள் அப்படி தான் பேசுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை