உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்; எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்

பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்; எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள் என லோக்சபாவில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்து 16 மணி நேர விவாத்திற்கு முன், எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, பார்லிமென்டில் பஹல்காம் தாக்குதல் மற்றும் 'ஆப்பரேஷன் சிந்துார்' தொடர்பான சிறப்பு விவாதம் இன்று நடைபெற உள்ளது. இது தொடர்பாக, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய வேண்டாம், பாகிஸ்தானின் மொழியில் பேச வேண்டாம். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரை நான் கேட்டுக்கொள்கிறேன். நாம் கவனமாக இருக்க வேண்டும். இந்திய பாதுகாப்பு படைகளின் கண்ணியத்தை நாம் பராமரிக்க வேண்டும்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேசிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு அறிக்கைகளையும் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதை தவிர்க்க வேண்டும். இந்திய மக்களின் விருப்பத்தின் பேரில்தான் பிரதமர் இந்திய ராணுவத்தின் மூலம் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடங்க முடிவு செய்தார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஆப்பரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் இன்று லோக்சபாவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Tamilan
ஜூலை 28, 2025 22:28

இவர்களைப்போல் தலிபான் மொழயில் பேசவேண்டுமா


தத்வமசி
ஜூலை 28, 2025 21:40

இன்றைக்கு பிஜேபி, பிஜு ஜனதா தவிர அநேகமாக எல்லா எதிர்கட்களும் எதிரி நாட்டு குரலில் தான் பேசுகிறார்கள். சீனா, பாகிஸ்தான், மேற்கத்தைய நாடுகள், அமேரிக்கா போன்ற நாடுகள் என்ன கேள்விகள் கேட்க துடிக்கின்றார்களோ, எப்படி நம்மீது விமரிசனத்தை வைக்கிறார்களோ அது போலவே இந்த எதிர்கட்சிகளும் பேசுகின்றன. சிவசேனா என்றொரு கட்சி நாட்டுப் பற்றுடன் இருந்தது. ஆனால் அது காங்கிரசுடன் சென்று கலந்து கரைந்து விட்டது. வேறு எந்த கட்சியும் தேச நலனை முன்னிட்டு பாராளுமன்றத்தில் பேசுவதாக தெரியவில்லை.


முருகன்
ஜூலை 28, 2025 19:55

எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் பாகிஸ்தானை துணைக்கு அழைப்பது ஏன் இதுவரை தாக்குதல் நடத்திய பயங்காரவதிகளை பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது


V RAMASWAMY
ஜூலை 28, 2025 18:44

மிக மிக வெளிப்படையான உண்மை கருத்து. இந்த போலியான இண்டி இந்தி எப்பொழுதாவது நம் நாட்டின் சார்பில் பேசுகின்றனரா? உங்களுக்கு விரோதிகள்தான் பிடிக்கும் என்றால், அங்கேயே குடியேறலாமே, என்ன தயக்கம், இவ்வளவு சுதந்திரமும் வசதிகளும் கிடைக்காதென்றா?


Ramesh Sargam
ஜூலை 28, 2025 13:36

பாகிஸ்தானின் மொழியில் தொடர்ந்து பேசுபவர்களுக்கு, இந்திய மொழியில், அதாவது Operation Sindoor, Surgical Strike என்கிற மொழியில் பதில் கூறவேண்டும்.


சமீபத்திய செய்தி