உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதாரம் இல்லாமல் ஓட்டு திருடியதாக காங்., குற்றச்சாட்டு; மேலும் தோல்விக்கே வழிவகுக்கும் என்கிறார் பட்னவிஸ்

ஆதாரம் இல்லாமல் ஓட்டு திருடியதாக காங்., குற்றச்சாட்டு; மேலும் தோல்விக்கே வழிவகுக்கும் என்கிறார் பட்னவிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆதாரம் இல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் கூறிய ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு, மேலும் தோல்விக்கே வழிவகுக்கும் என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் தெரிவித்து உள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் பட்னவிஸ் பேசியதாவது: தேர்தல் கமிஷனிடமோ அல்லது நீதிமன்றங்களிடமோ எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல், ஓட்டுப்பதிவில் மோசடி மற்றும் முறைகேடுகள் என்று காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் மேலும் தேர்தல் தோல்விகளுக்கு வழிவகுக்கும். காங்கிரஸ் மக்களுடன் மீண்டும் இணைந்து, பொதுமக்களைப் பற்றிய உண்மையான பிரச்னைகளை எழுப்ப வேண்டும்.பிரதமர் மோடி மீது மக்கள் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.எதிர்க் கட்சிகளின் போலி கதைக்கு, நாட்டு மக்கள் நேரடியாக பதிலளித்து வருகின்றனர். காங்கிரஸ் தனது அணுகுமுறையை மேம்படுத்தவில்லை என்றால், மஹாராஷ்டிராவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதே தோல்வியை சந்திக்க நேரிடும். இவ்வாறு பட்னவிஸ் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜெய்ஹிந்த்புரம்
நவ 16, 2025 20:55

எல்லா வோட்டையும் திருடி விடுவோம் என்கிறார்.


rama adhavan
நவ 17, 2025 00:17

திருடப்பட்டவன் எவனும் புகார் தந்தானா? எங் இந்தியா சொத்தை தன் பேருக்கு மாற்றிக்கொண்டவன் அதற்கு உடந்தையாய் இருந்தவன் இவர்கள் சொன்னால் யார் நம்புவார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை