மேலும் செய்திகள்
ஏ.ஐ., புகைப்படம் பதிவிட்ட கேரள காங்., நிர்வாகி கைது
1 minutes ago
புதுடில்லி: டில்லியில், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்துக்கு பதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' சட்டத்தை எதிர்த்து, நாடு முழுதும் ஜன., 5 முதல் போராட்டம் நடத்த அக்கட்சி முடிவு செய்து ள்ளது. தலைநகர் டில்லியில் உள்ள காங்., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. தீர்மானம் இதில், பார்லி., - காங்., குழு தலைவர் சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பங்கேற்றனர். காங்., தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் அக்கட்சியின் மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூரும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். தவிர, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோரும் பங்கேற்றனர். கூட்டத்தில், எஸ் .ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி, விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டம், 2027ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் தேர்தல் பணி களை துவங்குவது குறித்து விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து, நாடு தழுவிய அளவில், ஜன., 5 முதல், விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தவும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் கார்கே கூறியதாவது: ஜனநாயகத்தை சீர்குலைக்க, தேர்தல் கமிஷனுடன் இணைந்து எஸ்.ஐ.ஆர்., பணியை பா.ஜ., செய்கிறது. இந்த சதி வேலைக்கு தேர்தல் கமிஷன் துணைப் போவது அதிர் ச்சியும், கவலையும் அளிக்கிறது. பாராட்டு மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என்பது, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அ ரசின் தொலைநோக்குப் பார்வை கொண்ட சட்டம். இதை உலகமே பாராட்டியது. தற்போது இந்த சட்டத்தில் இருந்து காந்தியின் பெயரை நீக்கி, அவரை பா.ஜ., இழிவுபடுத்தி உள்ளது. இதனால் நாட்டு மக்கள் வெகுண்டெழுந்துள்ளனர். இதை எதிர்த்து, ஜன., 5 முதல் நாடு முழுதும் காங்.,சார்பில் போராட்டம் நடக்கும். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது போல, இந்த சட்டத்தையும் போராட்டத்தின் மூலம் ரத்து செய்ய வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியதாவது: பண மதிப்பு நீக்க நடவடிக்கை போலவே, விக்சித் பாரத் ஜி ராம் ஜி சட்டத்தின் மூலம், ஏழைகள் மற்றும் மாநிலங்கள் மீது, மீண்டும் ஒரு முறை பிரதமர் மோடி பேரழிவு தாக்குதலை நடத்தி உள்ளார். மத்திய அமைச்சரவை மற்றும் மாநில அரசுகளிடம் கலந்தாலோசிக்காமல், எந்த ஆய்வும் செய்யாமல், மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை தனி ஆளாக அவர் அழித்து விட்டார். இதை எதிர்த்து, ஜன., 5 முதல் காங்., உறுதியாக போராடும். இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்க வேண்டும். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என்பது, வெறும் வேலை திட்டம் மட்டுமல்ல. அது கிராமப்புறப் ப ஞ்சாயத்துகளுக்கு நிதி மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கிய ஒரு கட்டமைப்பு. அதை ரத்து செய்வது, நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இது, ஏழை மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தப் போகிறது. அ தே நேரம், அதானிக்கு முழுமையாக பயன்அளிக்கப் போகிறது. ஏழை மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து அதானி போன்றவர்களிடம் ஒப்படைப்பது தான் இதன் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
1 minutes ago