உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மோடி, அமித் ஷா பதவி விலக காங்., கார்கே வலியுறுத்தல்

 மோடி, அமித் ஷா பதவி விலக காங்., கார்கே வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை டில்லி நீதிமன்றம் நிராகரித்ததை வரவேற்கிறோம். பழிவாங்கும் அரசியலில் ஈடுபடும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்,'' என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார். 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், பார்லி., - காங்., குழு தலைவர் சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக, அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டில்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது. 'இந்த வழக்கு தனிநபரால் அளிக்கப்பட்ட புகாரின்படி துவங்கப்பட்டதே தவிர, முறையான முதல் தகவல் அறிக்கையின்படி அல்ல. 'எனவே, பண மோசடி சட்டத்தின் கீழ் இதை விசாரிக்க முடியாது' என, நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நிம்மதி அடைந்துள்ளனர். இது குறித்து, டில்லியில் நேற்று, காங்., தலைவர் கார்கே கூறியதாவது: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். உண்மை எப்போதும் வெல்லும். பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும். இது அவர்கள் முகத்தில் விழுந்த அறை போன்றது. இது போன்ற செயல்களை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜாமினில் தான் உள்ளனர்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்., தலைவர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். வழக்கில் இருந்தே சோனியா, ரா குல் விடுவிக்கப்பட்டது போல பேசி வருகின்றனர். அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை தான் டில்லி நீதிமன்றம் ஏற்கவில்லையே தவிர, வழக்கை தள்ளுபடி செய்யவில்லை. டில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சோனியா, ராகுல் ஜாமினில் தான் வெளியே உள்ளனர் என்பதை காங்., தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.- கவுரவ் பாட்டியா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Bhaskaran
டிச 18, 2025 19:12

டெல்லியில் ரொம்ப குளிர்


Rajasekar Jayaraman
டிச 18, 2025 18:52

காங்கிரஸ்காரனும் இந்தி கூட்டணி திருட்டுக் கூட்டமும் இந்தியாவை விட்டு வெளியேறினால் பதவி விலகுவார்கள்


Sridhar
டிச 18, 2025 15:09

யோவ், நீயே ஒரு கேவலமான பொழப்பு பண்ணிட்டு திரியற இதுல மோடி ஷா லெவெல்ல பேச்சு ஒரு கேடா? போய்யா, போயி வயசான காலத்துல ஒரு மூலைல உக்காரு.


cpv s
டிச 18, 2025 14:48

no need congress service in india any more, first arrest all people and put in the jain min 99yrs


angbu ganesh
டிச 18, 2025 14:04

இவன் ஒருத்தன் அப்புறம் ரவைக்கலாமா ஆட்சி பண்ணும் அது மூஞ்ச பார்த்தேலே எரியுது போடா போய் வேற வேலய பாரு


Rathna
டிச 18, 2025 13:24

வீடுகளில் புழங்கும் பழமொழி. சோத்துக்கு தண்டம். நாட்டிற்கு பாரம்.


Gurumurthy Kalyanaraman
டிச 18, 2025 13:20

கார்கே முதலில் கர்நாடகாவில் நடக்கும் சித்தா - சிவகுமார் குடுமி பிடியை தீர்க்கட்ட்டும். பின்னர் மோடி மற்றும் ஷாவை பற்றி கமெண்ட் கொடுக்கலாம்.


நிக்கோல்தாம்சன்
டிச 18, 2025 12:34

அப்போ நீதிபமன்றத்தை முன்னிறுத்தி சொல்லும் நீங்க உங்களின் கூட்டணி கட்சியான திமுகவினரின் தவறான நடவடிக்கையால் நீதிபதி ஒருவர் பந்தாடப்படுவத்தை கண்டும்காணாமல் இருப்பது எதற்காக ?


Anand
டிச 18, 2025 12:25

நீயும் உன்னோட இத்தாலிய மாபியாக்களும் இந்நாட்டை விட்டு தொலைந்தால் மிகவும் நல்லது.


Iyer
டிச 18, 2025 12:05

நீங்கள் நிரபராதி என்றால் இன்னும் ஏன் ஜாமீனில் இருக்கிறீர்கள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை