உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலக வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலக வேண்டும்; காங்கிரஸ் வலியுறுத்தல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 13 பேரின் உயிரைக் குடித்த சாலை விபத்திற்கு பொறுப்பேற்று, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் கடந்த 20ம் தேதி ரசாயனங்கள் நிரப்பிய லாரி, பிற வாகனங்களின் மீது மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு மத்திய போக்குவரத்தில் உள்ள ஊழல் முறையே காரணம் என்று குற்றம்சாட்டிய முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரதாப் சிங் கச்சாரியவாஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஜெய்ப்பூர் - அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அதிக சுங்கக்கட்டணத்தை வசூலிக்கிறது. இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியம் காட்டப்பட்டுள்ளது. எனவே, சுங்க நிறுவனம் தான் இந்த விபத்துக்கு முழு பொறுப்பு. சுங்க நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாதகமாக செயல்பட்டு வருகிறார். மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை சுங்க நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாய நிபந்தனைகள் உள்ளது. ஆனால், இவை எதுவுமே செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட சுங்க நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் பதவியை நிதின் கட்கரி ராஜினாமா செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N.Purushothaman
டிச 23, 2024 10:26

காங்கிரஸ் கட்சி அதிகார வெறியில் இருப்பது தெள்ள தெளிவாகி உள்ளது ...


Gopal
டிச 23, 2024 09:21

காங்கிரஸ் ஒரு சரியான அறிவு கெட்ட குட்டிச் செவரான கட்சி. அதோட தலைமை ஒரு கிளவுன் வேற.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை