உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2009ம் ஆண்டு வரை எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை சூட்டாதது ஏன்: பாஜ கேள்வி

2009ம் ஆண்டு வரை எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை சூட்டாதது ஏன்: பாஜ கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜலந்தர்: நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2009ம் ஆண்டு வரையில் எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை வைக்கவில்லை என்று பாஜ எம்பி அனுராக் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தின்படி, 100 நாட்கள் வேலையானது, 125 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வேலைவாய்ப்பு அதிகரிக்கவே செய்யும். இந்தத் திட்டத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்துவிட்டார்.இருப்பினும் இந்த திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காந்தியின் பெயரை நீக்கி விட்டதாகவும் புகார் கூறி வருகின்றனர். நாடு தழுவிய போராட்டத்துக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2009ம் ஆண்டு வரையில் எந்தத் திட்டத்திற்கும் காந்தியின் பெயரை வைக்கவில்லை என்று பாஜ எம்பி அனுராக் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; பொய்யுக்கு மறுபெயர் தான் காங்கிரஸ். ஏனெனில் அவர்கள் பொய் பிரசாரத்தின் மூலம், நாட்டு மக்களை தவறான பாதையில் வழிநடத்துகிறார்கள். அவர்கள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்துபோதும் கூட, 2009ம் ஆண்டு வரை எந்தத் திட்டத்திற்கும் மகாத்மா காந்தியின் பெயரை வைக்கவில்லை. அதன்பிறகு தான், 100 நாள் வேலைத்திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்டினார்கள், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

முருகன்
டிச 21, 2025 22:19

சூட்டிய காந்தி பெயரை நீக்கியதற்கு முதலில் பதில் சொல்லவும்


Thravisham
டிச 22, 2025 20:27

உண்மையில் காந்தி மட்டுந்தான் தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்க பாடுபட்டாரா?


raju
டிச 21, 2025 21:34

பெயர் முக்கியமா இல்லை வேலை வாய்ப்பு முக்கியமா? மோகன் தாஸ் கரம் சந்த் அவர்கள் பெயர் சொல்லி இந்த தேசத்தை மாற்றிக் காட்டியது போதும். நாடு சுதந்திரம் அடைந்த பின் எந்த ஒரு பதவியும் வேண்டாம் என முடிவு செய்த அவர் எந்நாளும் தன் பெயர் முன் வர சம்மதிக்க மாட்டார். வாக்குத் திருட்டு பிரச்சாரம் பிசுபிசுத்த நிலையில் இப்படி ஒரு அரசியல் நிலைப்பாடு எடுத்துக் கொண்டு திரிந்து கொண்டு இருக்கிறது இந்திரா காங்கிரஸ்.


Vasan
டிச 21, 2025 20:59

பாஜக வின் இந்த அணுகுமுறை மிகவும் தவறு. மகாத்மா காந்தி அவர்கள் நமது தேசப்பிதா. அவர் பெயரில் உள்ள திட்டத்திற்கு வேறு பெயர் வைக்க முயல்வது மிகவும் தவறு.


SUBBU,MADURAI
டிச 22, 2025 05:14

இந்த தேசத்திற்கு எந்த நன்மைகளையும் செய்யவில்லை மாறாக எவ்வளவு தீங்கு செய்தார் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் நிறைய உள்ளது.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
டிச 21, 2025 20:25

நீங்கள் என் எடுத்தீர்கள் என்றால் அவர்கள் ஏன் 2009 வரை வைக்கவில்லை என்பது என்னவிதமான பதில் ? பா ஜ வின் தரம் அவ்வளவு தான்.


Thravisham
டிச 22, 2025 20:32

முடிஞ்சது ஜோலி.


SS
டிச 21, 2025 19:55

அதை ஏன் நீங்கள் நீக்கினீர்கள்?


திகழ்ஓவியன்
டிச 21, 2025 19:52

சரி 2009 க்கு பிறகு காந்தி வைத்த பொது ஏன் சும்மா இருந்தீர்கள் இல்லை நீங்கள் MP யாகவாவது இருந்தீர்களா


vivek
டிச 21, 2025 20:51

திகழ் எப்பவும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லையே


V Venkatachalam, Chennai-87
டிச 21, 2025 21:38

நீங்க எல்லாரும் எதுக்காக குதிக்கிறீங்க? நீங்க குதிக்குறதால என்ன உருப்படியான காரியம் நடக்கும்? எந்த மடையனாவது காந்தி பேரை மறைத்து விட்டதால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் ன்னு சொலறானுங்களா? நீ ஏன் சொல்றே நீ ஏன் சொல்லலை? இதை பேசுவதால் வெட்டியா தான் பொழுது போகும். ஆக்க பூர்வமா பேசுற துக்கு ஒருத்தனையும் காணோம்.


முருகன்
டிச 21, 2025 22:20

நீக்கியதற்கு பதில் இல்லை அதற்குள் திமுகவை....... அறிவாளி