உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரிசல்ட் வெளியிட ரொம்ப லேட் பண்றீங்க! தேர்தல் ஆணையம் மீது பாய்ந்த காங்.,

ரிசல்ட் வெளியிட ரொம்ப லேட் பண்றீங்க! தேர்தல் ஆணையம் மீது பாய்ந்த காங்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானா தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்க தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. பா.ஜ.,வுக்கு பின்னடைவு என்றும் தகவல்கள் வெளிவந்தன. சிறிது நேரத்தில் அதிக தொகுதிகளில் பா.ஜ., முன்னிலை நிலவரம் என கள நிலைமை மாறியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k84mfdls&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடக்கத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர், முன்னணி நிலவரம் மாறியதால் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்தடுத்து நேரம் கடந்து செல்ல, முன்னிலை நிலவரங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்தனர்.இந்நிலையில் தேர்தல் முடிவுகளையும், முன்னணி நிலவரங்களையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.தேர்தல் ஆணையத்தின் தாமதம் குறித்து அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையம் என்பது ஒரு அரசியலமைப்பு. எந்த அழுத்தத்துடன் செயல்படக்கூடாது. தேர்தல் ஆணையத்துக்கு நான் ஒரு கடிதம் எழுதி உள்ளேன். செய்திகளில் 12 சுற்றுகள் பற்றிய விவரங்கள் இருக்கும் போது தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 4 அல்லது 5 சுற்றுகளின் நிலவரங்கள் பற்றிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஏன் முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் தாமதப்படுத்துகிறீர்கள்.ஹரியானா மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் நிச்சயம் காங்கிரசுக்கு ஆதரவாக தான் இருக்கும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

M Ramachandran
அக் 09, 2024 11:49

அடுத்த விடியலா அல்லது விடியா மூஞ்சியா?


பேசும் தமிழன்
அக் 09, 2024 08:05

ரமேஷ்.... அது தான் புட்டு கொண்டு விட்டதே.... மக்கள் உங்களை நம்பவில்லை.... பப்பு பட்டாயா போகும் போது... கூடவே போய் குதூகலமாக இருங்கள் .


bgm
அக் 08, 2024 19:07

பார்லிமெண்ட் தேர்தலில் மரண அடி வாங்கிய கான் Cross தோல்வியை கொண்டாடும் 2009 தேர்தலில் ப சி வெற்றியை 24 மணி நேரம் ஆகியும் அறிவிக்க வில்லை ஏன் ? இன்னமும் அந்த வழக்கு நிலுவையில். ரொம்ப koovaatha


Rajan
அக் 08, 2024 18:24

இவங்களுக்கு இன்னமும் புத்தி வரவில்லை. கட்சியை பலப்படுத்துவதை விட்டு விட்டு கூச்சம் இல்லாமல் கூச்சல் போட்டு கொண்டே இருப்பார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 08, 2024 17:37

காங்கிரஸ் கூட்டணி வெற்றி ன்னு எங்க ஆசைப்படி, எங்களுக்கு சாதகமா சொல்லிட்டா கப்சிப் ன்னு போயிருவோம் .....


Anand
அக் 08, 2024 17:09

இவர் இந்தியாவிற்கு பாரம்........


GoK
அக் 08, 2024 16:19

தலைமுடி வளர்ந்து வாயுக்கு வந்திடுச்சு அதான் பேச்சு இப்படி ...முடிய வெட்டினா சரியாயிரும்


ஆரூர் ரங்
அக் 08, 2024 16:13

குரங்கு அழகா? இருக்கிறத பாத்து அது கையில பூமாலையை கொடுத்திருக்காங்க. அனுபவிக்கட்டும்.நல்லா அனுபவிக்கட்டும்.


அசோகன்
அக் 08, 2024 15:56

அது புலி இல்ல பாஸ் ???


Jysenn
அக் 08, 2024 15:31

அர்பன் நக்சாலைட்டுகள் ஒழிக்க பட வேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை