உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ்; மக்களுக்கு பிரதமர் மோடி வார்னிங்

பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ்; மக்களுக்கு பிரதமர் மோடி வார்னிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நந்தீத்: ஓ.பி.சி., எனும் மிகப்பெரிய சமூகத்தை உடைத்து, சிறு சிறு வகுப்புகளாக பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலையொட்டி மஹாராஷ்டிராவில் சூறாவளி பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். இன்று நந்தீத் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது: அரசியல் ஆதாயத்திற்காக ஓ.பி.சி., பிரிவினரை பிரிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து சமூக மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஓ.பி.சி., பிரதமரை காங்கிரஸால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்களுடன் மக்களாக ஓ.பி.சி., பிரதமர் இருப்பதை காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஓ.பி.சி., எனும் மிகப்பெரிய சமூகத்தை உடைத்து, சிறு சிறு வகுப்புகளாக பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. எனவே, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் ஒற்றுமையாக இருந்தால் தான், நாம் பாதுகாப்பாக இருக்க முடியும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Sampath Kumar
நவ 10, 2024 10:35

காங்கிரீஸை குறை சொல்வது அப்பட்டமான பொய் என்ன செய்யபொய்யிலே பிறந்து வளர்ந்த ஓரே கட்சி உங்க கட்சிதான்


sankar
நவ 10, 2024 10:06

உண்மைதான் - சகவாச தோஷமோ என்னமோ தெரியவில்லை - இப்போதெல்லாம் அரசியல் பேசுவது இல்லை, ஜாதி பற்றியே சந்திப்பும் பேச்சுமாக எழுதி கொடுத்ததுதான் இருக்கிறார் பப்பு


Mario
நவ 10, 2024 09:44

இதெல்லாம் சரி, மணிப்பூர் எப்ப போறீங்க


Sivakumar
நவ 10, 2024 09:21

ஒரிஸ்ஸாவில் தமிழ்நாட்டுக்காரன் உங்களை எப்படி ஆளுவதுனு கேக்குறது. CAA க்கு எதிரான போராட்டத்தின்போது தீவிரவாதிகளை அவர்களின் ஆடையை வைத்தே தெரிந்துகொள்ளலாம்னு சொன்னது எந்த வாய், எந்த கட்சியின் சூழ்ச்சின்னு எல்லாருக்கும் தெரியுமே


முருகன்
நவ 10, 2024 07:33

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பேச்சு பேசுவது யார் ?


hari
நவ 10, 2024 06:25

இரண்டு 201 ரூபாய்


google
நவ 09, 2024 23:44

அத நீங்க சொல்றீங்க.


Sivakumar
நவ 10, 2024 09:18

ஒரு பொய்யை திருப்பித்திருப்பி சொன்னா நம்ப வாய்ப்பு இருக்குல்ல, அதான் try பண்ணி பாக்குறார்


Priyan Vadanad
நவ 09, 2024 22:57

எப்படி அழகாக பிளேட்டை மாற்றிவிடுகிறார் நமது பிரதமர் இதற்காக இவரை பாராட்டவேண்டியதுதான்.பேசுவது ஒன்று. செயலாக்கத்தில் இன்னொன்று. ஆட்சியும் சொத்தும் ஒரு குறிப்பிட்ட இனத்திடமும், நபர்களிடமும் எப்போதும் இருந்திட இவர் எடுக்கும் முயற்சிகளும், முடிவுகளும் வெற்றி பெற வாழ்த்துவோம்.


Sathyanarayanan Sathyasekaren
நவ 10, 2024 07:43

காங்கிரஸ் போலி காந்தி குடும்பம் ஆட்சியில் இருந்த பொது சோறு தண்ணி இல்லாமல் கொள்ளை அடிக்க வந்த அந்நிய மதத்தினருக்கு ஆதரவாக வாரிய சட்டத்தை கொண்டுவந்து ஹிந்துக்களுக்கு துரோகம் செய்தது உன் கண்களுக்கு தெரியவில்லையா?


Sivakumar
நவ 10, 2024 09:16

யாரும் போலி காந்தி இல்ல சார். பெரோஸ் காந்தியின் பேரனுக்கு காந்தினு பேரு இல்லாம வேறு என்ன பேரு இருக்குமாம் ? சதா பொய் மூட்டை அவிழ்த்து விடக்கூடாது பாஸ்


முக்கிய வீடியோ