உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜக்தீப் தன்கர் ராஜினாமாவில் ஏதோ ஒன்று உள்ளது; காங்கிரஸ் சந்தேகம்

ஜக்தீப் தன்கர் ராஜினாமாவில் ஏதோ ஒன்று உள்ளது; காங்கிரஸ் சந்தேகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமாவில் ஏதோ ஒரு விஷயம் உள்ளது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.உடல்நலம், மருத்துவ பரிசோதனைகள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, தமது துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடித்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டார்.பார்லி. கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய முதல் நாளிலேயே ஜக்தீப் தன்கரின் இந்த முடிவு எதிர்க்கட்சிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந் நிலையில், ஜக்தீப் தன்கர் ராஜினாமாவில் ஏதோ ஒன்று உள்ளது, அவர் தமது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;துணை ஜனாதிபதியும், ராஜ்ய சபா தலைவருமான ஜக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்துள்ளது, விவரிக்க முடியாத அதிர்ச்சியை தருகிறது. நேற்று நண்பகல் 12,30 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழுவுக்கு தலைமை தாங்கினார். நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறிது நேர விவாதம் முடிந்த பின்னர், மீண்டும் மாலை 4.30 மணிக்கு கூட முடிவு செய்தது. அதேபோல் மாலை 4.30 மணிக்கு ஜக்தீப் தன்கர் தலைமையில் மீண்டும் குழு கூடியது. ஆனால் நட்டா, கிரண் ரிஜிஜூ வருகைக்காக காத்திருந்த போது, அவர்கள் வரவே இல்லை. இரண்டு மூத்த அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது ஜக்தீப் தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவில்லை. அவர் கோபம் அடைந்து இந்த குழுக் கூட்டத்தை இன்று மதியம் 1 மணிக்கு மாற்றினார். நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. இப்போது ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். அதற்கு அவர் உடல்நல பாதிப்பு பற்றிய காரணங்களை சொல்லி உள்ளார். அதை மதிக்க வேண்டும்.ஆனால் அவரது ராஜினாமாவுக்கு அதை விட வேறு ஏதேனும் ஆழமான காரணங்கள் உள்ளன. தற்போதுள்ள ஆட்சியின் கீழ் முடிந்தவரை, அவர் எதிர்க்கட்சிகளுக்கு இணங்க முயன்றார். அனைத்து விதிகளையும் கடைபிடிப்பவராக இருந்துள்ளார். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

பேசும் தமிழன்
ஜூலை 22, 2025 18:39

முந்தைய கான் கிராஸ் மற்றும் திமுக கூட்டணி ஆட்சியில்..... ஜல்லிக்கட்டை தடை செய்த புண்ணியவான்..... தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடக்க காரணமாக இருந்தது மோடி அவர்கள்..... ஆனால் நம்ம ஊரு கூமுட்டைகள். . மோடி ஒழிக என்று கூறிக் கொண்டு அலைகிறார்கள்.


பேசும் தமிழன்
ஜூலை 22, 2025 18:31

அதே ஜக்தீப்தன்கர் அவர்களை பற்றி நீங்கள் தவறாக என்னவெல்லாம் பேசி இருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.


Ramalingam Shanmugam
ஜூலை 22, 2025 17:31

உலக tour ரிப்போர்ட் கொடுங்க mr பப்பு . தாய்லாந்து கொலம்பியா சேர்த்து


Velayutham rajeswaran
ஜூலை 22, 2025 16:17

ஜல்லிக்கட்டுக்கு இவர் தடை விதித்ததற்கு பின்னாலும் கூட ஏதோ ஒன்று இருக்கலாம் யாருக்கு தெரியும்


Anand
ஜூலை 22, 2025 16:07

ஆடு நனையுதே என சொறிநாய் வருத்தப்பட்டதாம்...


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 22, 2025 15:35

சென்ற கூட்டத்தொடர் பொழுது பாராளுமன்ற வளாகத்திலேயே இதே துணை ஜனாதிபதியை உருவக் கேலி செய்து மிமிக்ரி செய்தது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அதை மொபைல் ஃபோனில் படம் பிடித்து ரசித்தது ராகுல் காந்தி.


vbs manian
ஜூலை 22, 2025 15:14

மீன் கிடைக்குமா என்று காங்கிரஸ் தூண்டில் போடுகிறது.


S.V.Srinivasan
ஜூலை 22, 2025 15:06

எதோ நடந்திருக்கு, எதோ நடந்திருக்குன்னு புலம்பினா எப்படி. என்ன நடந்தது அதை சொல்லு.


தத்வமசி
ஜூலை 22, 2025 14:49

காங்கிரசுக்கு இதைப் பற்றி என்ன கவலை ?


SUBRAMANIAN P
ஜூலை 22, 2025 14:45

காங்கிரஸ் ராகுல் அடிக்கடி பாங்காக் போவதில் ஏதோ ரகசியம் உள்ளது. அது என்னவென்று காங்கிரஸ் தெரியப்படுத்தவேண்டும். சோனியா அடிக்கடி ஆஸ்பத்திரி போவதில் எதோ ஒன்று உள்ளது . அது என்னவென்று எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டும். பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ரா அடிக்கடி பாகிஸ்தான் போவதில் எதோ ஒன்று உள்ளது. அதை நோண்டி நொங்கெடுத்து உலகத்துக்கு தெரியப்படுத்தவேண்டும். இந்தாளு ஜெயராம் ரமேஷுக்கு வேறவேலையே கிடையாது. ஐயோ பாவம்.


முக்கிய வீடியோ