உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் தொகுதியில் இந்திய கம்யூ., போட்டி: இண்டியா கூட்டணியில் அடுத்த குழப்பம்

ராகுல் தொகுதியில் இந்திய கம்யூ., போட்டி: இண்டியா கூட்டணியில் அடுத்த குழப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி.,யாக உள்ளார்.எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூ., கட்சிகள், ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, திமுக, உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சில மாநிலங்களில் காங்கிரசுக்கு இடம் கொடுக்காமல், தனித்து களமிறங்க உள்ளதாக கூட்டணி கட்சிகள் அறிவித்தன. சில மாநிலங்களில் இன்னும் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y3rapbab&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில் கேரளாவில் திருவனந்தபுரம், திருச்சூர், வயநாடு மற்றும் மாவேலிகரா ஆகிய 4 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது. இதில் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூ., பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் தற்போது காங்கிரசின் ராகுல் எம்.பி.,யாக உள்ளார். கூட்டணி இன்னும் இறுதியாவதற்குள் ராகுலின் தொகுதியில் தன் கட்சி போட்டியிடுவதாக இந்திய கம்யூ., அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்