உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் கம்யூனிஸ்ட்டை கவிழ்த்த காங்கிரஸ்

கேரளாவில் கம்யூனிஸ்ட்டை கவிழ்த்த காங்கிரஸ்

திருவனந்தபுரம்: தேசிய அளவில் ‛ இண்டியா ' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட்டை, காங்கிரஸ் கவிழ்த்துள்ளது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், கம்யூ., 1 தொகுதியில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது.தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ‛ இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களில் இணைந்து தேர்தலை சந்தித்த அவ்விரு கட்சிகள், கேரளாவில் மட்டும் இரு கட்சிகளும் ஒவ்வொன்றை எதிர்த்து களமிறங்கின. கொள்கையை இதற்கு காரணம் என இரு கட்சிகளும் சமாளித்தன.ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் 13 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, பா.ஜ., மாநிலத்தை ஆளும் கம்யூ., கட்சி, கே.இ.சி., ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், காங்கிரஸ் தனித்து களம் கண்டதே, அம்மாநில ஆளுங்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மற்ற மாநிலங்களில் கூட்டணியாக கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட்டை, கேரளாவில் காங்கிரஸ் கவிழ்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பேசும் தமிழன்
ஜூன் 04, 2024 19:17

கம்மிகள் இந்த நாட்டில் இருந்து விரட்டப்பட வேண்டியவர்கள் ....தேவையில்லாத ஆணிகள்....இவர்களுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் ....இவர்கள் வெற்றி பெற்று...கான் கிராஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார்களாம் ...அதற்கு பேசாமல் கான் கிராஸ் கட்சிக்கு ஓட்டு போட்டு விடலாமே ??? ....எதற்க்கு காதை சுற்றி மூக்கை தொட்டு கொண்டு ??.


Sivaraman
ஜூன் 04, 2024 17:53

கேரளாவில் கவிழ்ப்பாங்க டெல்லியில் கூடிப்பாங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை