உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆளை விடுங்க சாமி... மூடா விவகாரத்தில் பின்வாங்கிய கார்கே!

ஆளை விடுங்க சாமி... மூடா விவகாரத்தில் பின்வாங்கிய கார்கே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: கர்நாடகாவில் மூடா வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தனது குடும்பத்தினர் நிர்வகிக்கும் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலத்தை திருப்பி வழங்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முடிவு செய்துள்ளார். 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில், பயனாளிகளுக்கு வீட்டு மனை ஒதுக்கியதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. முதல்வர் சித்தராமையா தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு மைசூரின் முக்கிய இடமான விஜயநகரில் 14 வீட்டுமனைகள் வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.மூடா வழக்கு விசாரணையை எதிர்த்து சித்தராமையா தொடர்ந்த வழக்கை கர்நாடகா ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இது அம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது. இருப்பினும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வரும் சித்தராமையா, மனைவிக்கு ஒதுக்கிய இடத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்த விவகாரம் சூடுபிடித்ததை உணர்ந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது குடும்பத்தினர் நடத்தி வரும் சித்தர்த்தா விஹார் அறக்கட்டளைக்கு, மூடா சார்பில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பட்டியலின இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சித்தர்த்தா விஹார் அறக்கட்டளைக்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு சட்டவிரோதம் என்றும், அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர் கவர்னரிடம் புகார் அளித்தார். மேலும், இது தொடர்பாக கர்நாடகா தொழில்துறை அமைச்சர் எம்.பி., பாட்டீலிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என லோக் ஆயுக்தாவில் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் எம்.பி., பாட்டீல், சித்தர்த்தா விஹார் அறக்கட்டளைக்கு நிலம் ஒதுக்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

kulandai kannan
அக் 14, 2024 15:31

இவர் குடும்பமே புத்த மதம். பல்லாயிரம் கோடிக்கு அதிபதி. ஆனால் சுயபச்சாதாப பித்தலாட்டம்.


Sivasankaran Kannan
அக் 14, 2024 11:12

இந்த போங்கிரெஸ் கரப்பான்கள் திருடாமல் இருந்தால் தான் ஆச்சரிய பட வேண்டும்


Kasimani Baskaran
அக் 14, 2024 05:54

பட்டியலினம் என்ற ஒரு காரணத்தை வைத்து ஐந்து ஏக்கர் நிலத்தை வெட்கமில்லாமல் அபகரித்து இருக்கிறார்கள். பேசுவது மட்டும் அப்படியே 100% உத்தமர் போல இருக்கும்.


RAJ
அக் 13, 2024 23:56

கான்கிராஸ் கட்சியில் சல்லடை போட்டு தேடினாலும் யோக்கியன் ஒருத்தர் கூட கிடைக்க மாட்டார்கள் போல


Ramesh Sargam
அக் 13, 2024 21:56

ஏன் பின்வாங்கவேண்டும்? ஏன் என்றால் இவர் பின்னணியிலும் முடா போன்ற பல முறைகேடுகள் இருக்கலாம்..


Srinivasan Ramabhadran
அக் 13, 2024 20:04

அரசியல்வாதிகள் புதியதொரு நடைமுறையை துவங்கி இருக்கிறார்கள். தாங்கள் லஞ்சமாக மற்றும் முறையற்ற வகையில் அடைந்த சொத்துக்களை திரும்ப அளித்து விடுவதாக கூறுகின்றனர். அப்படி திரும்ப அளித்து விட்டால் அவர்கள் உத்தமர் ஆகி விடுவார்களா? அந்த வகையில் எந்த தவறு செய்தவர்களும், அந்த தவறால் தான் பெற்ற பொருட்களை அரசாங்கத்திடம் திரும்ப அளித்து விட்டால், தண்டனையில் இருந்து தப்பிக்க முடியுமா?


Rajan
அக் 13, 2024 19:30

தெரிந்து 5 தெரியாதது 500.


சஞ்ஞை
அக் 13, 2024 19:05

கொள்ளைக்கூட்டம் ….இவர்தான் தலைவன்…. ஆனால் பேச்சில் !!!


sankaranarayanan
அக் 13, 2024 18:38

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது குடும்பத்தினர் நடத்தி வரும் சித்தர்த்தா விஹார் அறக்கட்டளைக்கு, மூடா சார்பில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தை திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். சித்த ராமையாவும் தனது மனைவிக்கு ஒதுக்கப்பட்ட மனைகளை திரும்ப தந்துவிட்டார் இவர்கள் இருவருமே செய்த தவருக்குக்காக மனைகளை தகிரும்ப கிடுத்துவிட்டால் தண்டனை குறையவே குறையாது தவறுகள் இவர்களால் ஊர்ஜிதம் ஆகி தண்டனை பன் மடங்கு அதிகரிக்கும் இந்த இருவருமே காங்கிரசு கட்சிக்கு கெட்ட பெயரை வாங்கிக்கொடுத்த கட்சி பெருந்தலைவர்கள் என்றே கூறலாம் இருவருமே தில்லி கேஜரிவால் போன்று ராஜினாமா செய்தால்தான் மக்களுக்கு நிம்மதி


Nandakumar Naidu.
அக் 13, 2024 17:59

இந்த கத்தா கார்கே ரொம்ப யோக்கியன் போல சமூக நீதி பேசுவார். பிஜேபியை குறை சொல்வார். காங்கிரஸ்காரர்கள் என்றாலே முகமூடி கொள்ளையர்களை விட மோசமானவர்கள். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை திருப்பிக் கொடுத்தாலும் இவர்கள் மீது வழக்குடுத்த வழக்கு தொடர்ந்து அவர்களை உள்ளே தள்ள வேண்டும்.


முக்கிய வீடியோ