உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வரலாற்றில் காங்கிரசுக்கு கிடைத்த 2வது மோசமான தோல்வி

பீஹார் வரலாற்றில் காங்கிரசுக்கு கிடைத்த 2வது மோசமான தோல்வி

பாட்னா: பீஹார் தேர்தல் வரலாற்றில் 2010 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான தோல்வியை பதிவு செய்திருந்தது. தற்போது(2025) நடந்த தேர்தலில் 6 ல் மட்டுமே வெற்றி பெற்று 2வது மோசமான தோல்வியை காங்கிரஸ் பதிவு செய்துள்ளது.பீஹார் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. பீஹாரில் ராகுல் பாதயாத்திரை நடத்தியதும் கட்சி பலம் பெற்றதாக கூறி காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டது. ஆனால், கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆர்ஜேடி அதற்கு சம்மதிக்கவில்லை. கடந்த தேர்தலில் 70 தொகுதிகளை கொடுத்து 19 ல் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதனையடுத்து இந்த முறை அப்படி நடக்கக்கூடாது என்பதற்காக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க தேஜஸ்வி மறுத்தார். இதனால் இரு கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டது. தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் மறுத்தது. பிறகு ஒரு வழியாக இரு கட்சிகளும் பேசி தேர்தலை சந்தித்தன. காங்கிரசுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நீண்ட இடைவேளைக்கு பிறகு பீஹார் வந்த ராகுல் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது சகோதரி பிரியங்கா, காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் அக்கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. 6 ல் மட்டுமே அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.நாடு விடுதலை பெற்ற பிறகு பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று வந்த காங்கிரஸ், பிறகு சிறுக சிறுக பலத்தை இழந்து ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை வென்றுள்ளது.சுதந்திரத்துக்கு பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை:1952 - 2391957 -2101962-1851967 -1281972 - 1671977 -2861980 - 1691985 - 196 1990 - 71 1995 -29 2000 - 232005 பிப்.,- 10(84 ல் போட்டி)2005 அக்., - 9 (51 ல் போட்டி)2010 - 4( 243ல் போட்டி)2015- 27( 41ல் போட்டி)2020 -19( 70 ல் போட்டி)2025 - 6( 61 ல் போட்டி) தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

GaneshBabu Parthasarathi
நவ 18, 2025 01:02

All are saying mistake against Ragul. He came for a country trip to India and campaign in Bihar elections. Now he returned to another tour. Why all are criticizing him???


Tetra
நவ 19, 2025 02:54

You are right. You should praise him. His ego and arrogant feeling of entitlement will bloat to such an extent the Congress baloon will soon burst into pieces on its own which will be good for the country. If there is a party that is anti national that is Indian National Congress.


kjpkh
நவ 15, 2025 17:23

அதுல பாருங்க காங்கிரஸ் ஜெயித்த ஆறு தொகுதிகளில் ஓட்டு திருட்டு நடக்கவில்லை போலும்


Sun
நவ 15, 2025 13:00

இந்தியாவை இழிவாக எண்ணுவது! அடிக்கடி வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா போய் வெளி நாடுகளில் இந்தியாவைப் பற்றி மோசமாக விமர்சனம் செய்வது! இதையே தொடர்ந்தால் 2029 ல் பாராளு மன்றத்திலும் மொத்தமே ஆறுதான். யாருக்கு? யாருக்கோ?


nisar ahmad
நவ 15, 2025 12:20

முதல் தோல்வி ஏற்றுக்கொள்ள கூடிய தோல்வி


கரீம் பாய், ஆம்பூர்
நவ 15, 2025 19:29

nizzar முதல் தோல்வி 95 என்றால் மற்ற 94 தோல்விகள்...?


தேவதாஸ் புனே
நவ 15, 2025 11:18

காங்கிரஸின் தோல்விக்கு ராகுல் காரணமல்ல..... பாஜகவின் வெற்றிக்கு தான் ராகுல் காரணம்....


arunachalam
நவ 15, 2025 11:11

முதலில், இந்தியா நன்றாக வேண்டும் என்றால், காங்கிரஸ் இங்கிருந்து துடைத்து எறியப்படவேண்டும்.


M Ramachandran
நவ 15, 2025 10:26

கலக்கத்தில் உள்ளது. பொய் சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது என்பது இப்போ ஸ் டாலினின் அறிவு தெளிவு கொடுள்ளது.


Tetra
நவ 19, 2025 03:01

நடக்காது ராஜா நடக்காது . ஒரு சிறு சதவிகித தமிழ் மாக்கள் என்றும் ₹2000க்கும் ப்ர்யாணிக்கும் க்வார்ட்டருக்கும் அடிமை. அவர்களே எல்லோர் தலைவிதியையும் எழுதுபவர்கள். மீறி ஏதாவது நடந்தால் இருக்கவே இருக்கிறார்கள் தமிழ் மான போராளிகள். த்ராவிடத்தை போராடியே காப்பாற்றி நாட்டை அழிப்பார்கள்


M Ramachandran
நவ 15, 2025 10:23

மக்களை சும்மா ஜிம்கா லகடி வேலை செய்து ஏமாற்ற முடியாதது என்பதாய் ஸ்டாலின் உணர்ந்து கொண்டார்


M Ramachandran
நவ 15, 2025 10:17

இந்த ஆள் செய்த தேச த்ரோகத்தை பொய் பித்த லாட்டத்தையம் மக்கள் மறக்க வில்லை என்பது தெரிகிறது.


A.Kennedy
நவ 15, 2025 09:43

எங்க....., காங்கிரஸ் நாட்டிலே இருக்கக்கூடாது, துடைத்து தூர எறியப்பட வேண்டிய கட்சி என்று சொல்லி வருகிறோம், நீங்க என்னன்னா காங்கிரஸ் படு தோல்வி அது இது என்று சொல்லுகிறீர்கள்.


புதிய வீடியோ