உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 27.... 19....6... நிதிஷ் அரசியலில் கரைந்து போன காங்கிரஸ்!

27.... 19....6... நிதிஷ் அரசியலில் கரைந்து போன காங்கிரஸ்!

புதுடில்லி: பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான காங்கிரஸ், பீஹார் அரசியலில் கரைந்தே போயிருக்கிறது. 2015ம் ஆண்டு 27 இடங்களிலும், 2020ல் 19 இடங்களிலும் வென்ற காங்கிரஸ், 2025 தேர்தலில் வெறும் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.பீஹாரில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மாநில அளவில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் இந்த தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.கருத்துக்கணிப்புகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முந்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், 200 தொகுதிகளை கடந்து இமாலய வெற்றியை பெற்றிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து களம் கண்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி மண்ணை கவ்வி இருக்கிறது.அதிலும், எஸ்ஐஆர் விவகாரம், மத்திய அரசுக்கு எதிரான தொடர் முழக்கங்கள் என்று வலம் வந்த ராகுலும், காங்கிரசும் இருந்த இடம் தெரியாத அளவுக்கு சென்று இருக்கிறது. தேர்தல் முடிவுகள் அதைத்தான் கூறுகின்றன.2015ம் ஆண்டில் 27 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், இப்போதைய 2025 தேர்தலில் 6 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் அந்த கூட்டணி ஆர்ஜேடி உடன் கூட்டணி அமைத்தது. போட்டியிட்ட இடங்கள் 61. கடும் இழுபறிக்கு பின்னர், இந்த 6 தொகுதிகள் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.2015ல் வென்றது 27 தொகுதிகள்(போட்டியிட்டது 41), 2020ல் வென்றது 19 தொகுதிகள் (போட்டியிட்டது 70) காங்கிரசுக்கு கிடைத்தது. ஆனால் இப்போது போட்டியிட்டது 61 தொகுதிகள். இப்படி கடந்த 10 ஆண்டுகளில் பீஹாரில் காங்கிரஸ் கட்சி கரைந்தே போயிருக்கிறது.பீஹார் சட்டசபை வரலாற்றில் இல்லாத அளவுக்கு இப்போது காங்கிரஸ் பின்னடைவு என்பதை விட தேய்ந்தே போய்விட்டது எனலாம். எஸ்ஐஆர் எதிர்ப்பு பிரசாரம், மத்திய பாஜ அரசின் மீது மக்கள் அதிருப்தி என்று யாத்திரை, பிரசாரம், தேர்தல் மாநாடு என்று தேஜஸ்வியுடன் ராகுல் தீவிர பிரசாரம் செய்தாலும் வெற்றி என்பது கிட்டவே இல்லை என்பதை விட, வெற்றி எட்டியே பார்க்கவில்லை என்பது தான் களநிலவரம். பாஜவின் சுறுசுறு பிரசாரம், நிதிஷின் 19 ஆண்டுகால முதல்வர் முகம், மகளிருக்கு ரூ.10,000 உதவித்தொகை உள்ளிட்ட பல காரணங்கள் ஆளும் கூட்டணியை மக்கள் தேர்வு செய்ய காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இப்படி ஒட்டுமொத்த காங்கிரஸ் வேட்பாளர்களும் பின்னடைவை சந்தித்து இருக்கும் சூழலில் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், தங்களின் அரசியல் பாதையை பீஹாரில் காங்கிரஸ் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

M. PALANIAPPAN, KERALA
நவ 21, 2025 11:15

ஆர்ஜேடி உடன் கூட்டணி இல்லை என்றால் இந்த ஆறு இடமும் கிடைத்து இருக்காது


M Ramachandran
நவ 20, 2025 18:36

சோனியா குடும்பம் கட்சியை விட்டு ஓடினால் தான் அல்லது விரட்ட பட்டால் தான் காங்கரஸ் என்ற கட்சிக்கு விமோசனம்.


Muthiah Mallika
நவ 18, 2025 20:28

நிதிஷ் அரசியலில் இல்லை SIR வாக்காளர் சீர் திருத்த அரசியலில் பிஜேபி யால் காணாமல் போய்விட்டது ...


M Ramachandran
நவ 18, 2025 12:10

மல்லிகார்ஜுன கார்கேவிற்கு. நல்ல தருணம் இதை நழுவ விடாதே என்று ஒரே ஓட்டம் கர்நாடாவிற்கு ஓடி விடுவதால் தலை தப்பிதான் தம்பிரான் என்று தேர்தல் தோல்வி அல்லது உடல் நிலை என்று அந்த குடும்பத்துடன் ஓட்டும் இல்லை உறவும் என்று திரும்பி பார்க்காமல் ஓடு. தொல்லயானா குடும்பத்திற்கு வேறு பூம் பூம் மாடு ஏதாவது மாட்டும்.


Ganesh Moorthy
நவ 18, 2025 09:11

இந்த 3 வேட்பாளர்கள் இப்போது எம்.எல்.ஏ.க்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், அவர்களும் தோற்றால், காங்கிரசுக்கு 3 இடங்கள் மட்டுமே.


K V Ramadoss
நவ 15, 2025 13:18

காங்கிரசின் தொண்டர்கள் தலைமை சரியில்லை என்று உணர்ந்து, புரட்ச்சி செய்து, காலத்திற்கு ஏற்ற வேறு தலைவர்களை தேர்ந்தெடுத்தால்தான் காங்கிரஸ் பிழைக்கும்.. இல்லையேல் நாடு முழுவதும் இதே நிலைதான் ஏற்படும். சோனியா குடும்பத்தினர் காங்கிரசை ஒழித்துவிட்டு வேறு நாடு சென்றுவிடுவர் அவர்களிடம் பணம் ஏராளம்


M Ramachandran
நவ 15, 2025 10:06

மூன்றும் சேர்ந்து மூக்கால் முனகி ஒப்பாரி வைத்து கொண்டிருக்கு.


நிக்கோல்தாம்சன்
நவ 14, 2025 21:53

கார்கேயின் மகனும் அவனுடைய பங்களிப்பை செய்தாரே . அவருக்கு என்ன சிறப்பு


Ravichandran Rangaswamy
நவ 14, 2025 21:49

தமிழ் மக்கள் எப்போது விழித்துகொள்வார்கள் ஆண்டவா


SRIRAM
நவ 14, 2025 21:06

Happy childrensRagul, priyanka, T. Yadav day


முக்கிய வீடியோ