உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்., சார்பில் வீடு கட்டிதரப்படும்: ராகுல்

நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்., சார்பில் வீடு கட்டிதரப்படும்: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தரப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறினார்.வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய பிறகு அதிகாரிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cf01ewpg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இது மிகவும் துயரமான சம்பவம். நிலச்சரிவில் மொத்தம் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது. 100க்கும் மேற்பட்ட வீடுகள் கட்சி சார்பில் கட்டித் தருவோம். இது போன்ற துயரமான சம்பவத்தை கேரளா பார்த்தது இல்லை. இந்த விவகாரத்தை மத்திய அரசு மற்றும் மாநில அரசிடம் எழுப்புவோம். இந்த மோசமான பேரிடரை, வித்தியாசமான முறையில் கையாள வேண்டும்.பாதிக்கப்பட்ட மக்களை அதே பகுதியில் குடியேற வேண்டும் என வலியுறுத்தக்கூடாது. அவர்கள் எங்கு விரும்புகிறார்களோ அங்கு குடியேற அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையானவற்றை மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ராமகிருஷ்ணன்
ஆக 03, 2024 02:32

ஓட்டுக்காக பேசும் கூட்டம். சிறிதும் நம்பிக்கை இல்லை. உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்ச பாவம் தான் வயநாடு மக்கள் தண்டிக்க பட்டுள்ளனர்.


Ramesh Sargam
ஆக 02, 2024 19:50

மக்களே உடனே நம்பி ஏமாறாதீர்கள். வீடு எங்கே கட்டுவார்கள்? அழிந்தது பல நூறு வீடுகள், குடும்பங்கள். காணாமல் சேற்றில் புதைந்தது பல கிராமங்கள். ஒரு சில இடங்களில் மொத்த குடும்பமே அழிந்திருக்கிறது. அப்படி இருக்கையில் இவர் யாருக்கு புது வீடு கட்டித்தருவார். ஆகையால், இவரின் வெறும் பேச்சை நம்பி மட்டும் ஏமாறாதீர்கள். வீடுகளை முதலில் கட்டட்டும். பிறகு இவர்களை நம்புவோம். இது என்ன தேர்தல் நேரமா, வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற?


enkeyem
ஆக 02, 2024 19:33

வீடு கட்டி தரப் போகிறீர்களா? எப்போ? அடுத்த கேரளா மாநில தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து வந்தா? கடா கேட், படா பட் என்று உருட்டி 99 சீட் ஜெயித்த பின்பு அல்வா கொடுத்தீங்களே அதுபோலவா? இந்த வாக்குறுதி வரும் வயநாடு இடைத்தேர்தலில் உமது தங்கை நிற்க போகிறார்களாமே. அதற்காகவா?


முருகன்
ஆக 02, 2024 17:55

அருமை


Ram pollachi
ஆக 02, 2024 17:39

சந்திர மண்டலத்தில் சகல வசதிகளுடன் வீடு கட்டி தரப்படும்.


Kavi
ஆக 02, 2024 17:27

Vayal vadai sudum pappu udaney nambidovom


Balasubramanian
ஆக 02, 2024 17:17

செய்தால் சரி! மக்களுக்கு நல்லது யார் செய்தாலும் வரவேற்கிறோம்


என்றும் இந்தியன்
ஆக 02, 2024 17:14

ஆகவே எனது பங்காக என்னிடம் இருக்கும் சொத்து ரூ 91 லட்சம் கோடியிலிருந்து வரும் வருமானத்தில் 0.0005% கொடுக்கின்றேன் அதாவது ரூ 4.45 கோடி கொடுக்கின்றேன், என்ன ராவுளு சரியா இந்த பணத்தில் 100 வீடுகள் ரூ 4.45 லட்சம் அவ்வளவு தான்ஒரு வீடு


விஜய்
ஆக 02, 2024 17:11

என்ன வித்தியாசமான முறையில் கையாள போறாங்க இவங்க சொத்த வித்து வீடு கட்டி தர போறாங்க ?


ram
ஆக 02, 2024 17:06

இந்த நூறு வாக்குறுதி கூட பிரியங்கா ஜெயிப்பதற்கு, ஜெயித்த பிறகு இவர்கள் இங்கு வரமாட்டார்கள். எப்படி அனைவருக்கும் 1000 என்று திருட்டு திமுக எலேச்டின் முன்பு, ஜெயித்த பிறகு தகுதி இருக்கும் மக்களுக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள், அதுபோல இந்த பப்புவும் எதாவது காரணம் சொல்லி எதுவும் செய்ய மாட்டார்கள். என்னவென்றால் அந்த மக்களும் இவர்களுளுக்கு தான் வோட்டு போடுவார்கள்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ