உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்., மணி சங்கர் பேச்சு

பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்., மணி சங்கர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் பக்கம் வர தயாராக உள்ளனர்,'' என, மூத்த காங்., தலைவர் மணி சங்கர் அய்யர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அல்ஹம்ரா என்ற இடத்தில் நடந்த இந்தோ - - பாக்., விவகாரம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்., மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பேசியதாவது:பாகிஸ்தான் மக்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். தேர்தலில் மோடிக்கு மூன்றில் ஒரு பங்குக்கு மேல் ஓட்டுகள் கிடைத்ததில்லை. ஆனால், இந்திய தேர்தல் நடைமுறைகளின் காரணமாக, மூன்றில் ஒரு பங்கு ஓட்டுகள் கிடைத்தாலும், மூன்றில் இரண்டு பங்கு சீட்டுகளை அவர் பெறுகிறார். எனவே, மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் பக்கம் வர தயாராக உள்ளனர்.இந்தியாவின் மிகப் பெரிய சொத்தாக பாகிஸ்தான் உள்ளது. பாக்., மக்கள் மீது எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு. பாக்.,கில் நான் கண்ட விருந்தோம்பலை போல வேறு எந்த நாட்டிலும் கண்டதில்லை.என் அனுபவத்தின்படி, பாக்., மக்கள் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். நாம் அன்பை வெளிப்படுத்தினால் அதிக அன்பையும், விரோதத்தை வெளிப்படுத்தினால், அதிக விரோதத்தையும் வெளிக்காட்ட கூடியவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.மணி சங்கர் அய்யரின் இந்த பேச்சுக்கு, நாடு முழுதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவர், இதற்கு முன்பும் பலமுறை பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.மணி சங்கர் அய்யருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., பிரமுகர் உதய் பி.கருடாச்சார் கூறியதாவது: பாகிஸ்தான் நல்ல விதமாக நடந்து கொள்ளும் வரை உலகம் முழுதும் அவர்களுடன் நன்றாகவே நடந்து கொள்வர். நீங்கள் மற்றவர்களை முட்டாளாக்க நினைத்தால், மற்றவர்களும் உங்களை முட்டாளாக்க நினைப்பர்.மணி சங்கர் அய்யர் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. பாகிஸ்தான் எங்களுடன் நல்ல விதத்தில் நடந்து கொண்டால், இரு நாட்டு உறவு அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் இருக்கும். அதை தான் நாங்களும் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

ரமேஷ்VPT
பிப் 14, 2024 02:22

இவனெல்லாம் இந்தியாவில் வசிக்கவே தகுதி இல்லாதவன். இவனை நாடு கடத்தவேண்டும். இப்போ மோடி ஆட்சி இல்லாமல் இவர்களுடைய ஆட்சி இங்கு இருந்திருந்தால் நாட்டை கூறு போட்டு விற்று தின்றிருப்பார்கள். இந்த மாதிரியான துரோகிகளை அரசியலிலிருந்தே அகற்றவேண்டும். இந்த தேர்தலில் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்.


sridhar
பிப் 13, 2024 21:33

இவருக்கு ஜெயலலிதா போன்ற தலைவி தான் லாயக்கு . ஓட ஓட விரட்டி அடித்தார்.


Rajasekar Jayaraman
பிப் 13, 2024 20:29

பெயர் மட்டும் மணி ஷங்கர். தொடப்பத்துக்கு பட்டு குஞ்சம்.


M Ramachandran
பிப் 13, 2024 20:04

வயது ஏற ஏற மூளை குழம்பி நம்பும் நிச்சயமற்ற தன்மாய் வந்து விடுகிறது. மூளையின் செயல் திறமை குறைந்து விடுகிறது. சரியாக பகுத்து பார்க்கா இயலவில்லை.


J.V. Iyer
பிப் 13, 2024 19:38

மணிசங்கர் ஒரு பாகிஸ்தானி. அவரை பாகிஸ்தானுக்கு விரட்டவேண்டும்.


Ramesh.M
பிப் 13, 2024 18:53

என்ன ஒரு நெஞ்சழுத்தம்.. என்னுடைய பாரத பூமியின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் முட்டு கட்டையாய் நிற்கும் இந்த எதிரி நாட்டிற்கு அந்த நாட்டிலே சென்று நம் நாட்டை இகழ்வது சொந்த தாயை தூற்றுவதற்கு சமம். இப்போ சொல்லுங்கள் . மோடிஜி மட்டும் இல்லை என்றால் இவனுங்க எப்போதே நம்ம நாட்டை வித்திருப்பானுங்க.. இந்த ஜென்மங்களை எல்லாம் தயவு தாட்சண்யம் பார்க்காம உடனடியா நாடு கடத்த வேண்டும்.... ஜெய் ஹிந்...


பேசும் தமிழன்
பிப் 13, 2024 18:41

பாகிஸ்தான் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடுதாம்.... நீயும்... அரைவேக்காடு பப்பு வும்.... பாகிஸ்தான் போய் செட்டிலாகி விடுங்கள்...... இந்திய மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.


vijay
பிப் 13, 2024 17:13

இந்த பாகிஸ்தானி ஏஜென்ட் கைது செய்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும், அல்லது விரட்டவேண்டும். நாட்டு மக்களிடம் அரசே முன்வந்து கையெழுத்து இயக்கம் நடத்தவேண்டும். இந்த ஆளின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யவேண்டும்.


jayvee
பிப் 13, 2024 16:37

விலைபோன ஐயர்


GANESUN
பிப் 13, 2024 16:35

வாங்கின காசுக்கு மேல கூவராங்க...


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை