உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்

அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா குறித்து அவதூறாக பேசியதாக கூறி, ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் நோட்டீஸ் அளித்து உள்ளது.

குற்றச்சாட்டு

ராஜ்யசபாவில் நேற்று பேரிடர் மேலாண்மை மசோதா 2024 மீதான விவாதம் நடந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமரின் தேசிய நிவாரண நிதி காங்கிரஸ் ஆட்சியின் போது உருவாக்கப்பட்டது. தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பிரதமர் மோடியால் 'பிஎம் கேர்ஸ்' நிதி உருவாக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு குடும்பம் தான் நாட்டை கட்டுப்படுத்தியது. பிரதமரின் நிவாரண நிதியில் காங்கிரஸ் தலைவரும் ஒரு அங்கமாக இருந்தார். இதற்கு நாட்டு மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள். உங்களை யாரும் பார்க்கவில்லை. கவனிக்கவில்லை என நினைத்து கொண்டு உள்ளீர்கள். இவ்வாறு அவர் பேசினார். அமித்ஷா தனது குற்றச்சாட்டில் யாரின் பெயரையும் குறிப்பிடவில்லை.

எதிர்ப்பு

இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சு அவை விதிகளை மீறுவதாகவும், சபையை அவமதிப்பது போல் உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக அவர், ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மீது அவதூறான கருத்துகளை தெரிவித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கிறேன். சோனியாவின் பெயரை அவர் நேரடியாக சொல்லாவிட்டாலும், மறைமுகமாக அவரை பற்றிப் பேசி , அவர் மீது உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டி உள்ளார். சோனியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், அவருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமித்ஷா முன்வைத்தார். அமைச்சரின் குற்றச்சாட்டு தவறானது. அவதூறானது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Thiyagarajan S
மார் 27, 2025 07:01

யோவ் ஜெயராம் ஊட்டிஸ் கொடுப்பதெல்லாம் அப்புறமாக வைத்துக்கொள்.. முதலில் அமித் ஷாவின் புகாருக்கு பதில் சொல் பிரதமர் நிவாரண நிதி குழுவில் சோனியா இருந்தாரா இல்லையா அதை முதல்ல சொல்லுய்யா....


Venkataraman
மார் 26, 2025 23:09

அமித் ஷா கூறியதில் எந்த தவறும் இல்லை. மன்மோகன் சிங் பிரதம மந்திரியாக இருந்த போது கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்திதான் நிர்வாக பொறுப்புகளை கவனித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். பாராளுமன்றத்தில் பேசப்படும் பேச்சுகளுக்கு யார் மேலும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது


Raman
மார் 26, 2025 22:20

Congress party is being subjected to slow disappearance from public memory by these politicians acts. Party into oblivion and Jairam Ramesh sort of personalities accelerating the same. Good for our Country.


Suppan
மார் 26, 2025 22:02

பிரதம மந்திரியின் நிவாரண நிதி அமைப்பில் காங்கிரஸ் தலைவருக்கு என்ன வேலை? மற்ற கட்சிகளின் தலைவர்களைத் தள்ளி வைத்தது பரவாயில்லையா? சோனியா தன்னுடைய சொந்த அரசு சாரா அமைப்புக்கு இந்த நிவாரண நிதியிலிருந்து எதற்கு பணம் பெற வேண்டும்? இதெல்லாம் கோல்மால்தானே


Ramesh Sargam
மார் 26, 2025 20:05

பிரதமர் மோடிஜியை பற்றி உங்கள் கட்சியினர் தினம்தினம் அவதூறு பேசுகிறார்கள். அது பரவாயில்லையா?


தமிழ்வேள்
மார் 26, 2025 19:50

குற்றவாளி கிரிமினல் என்று யாராவது எங்காவது உச்சரித்தாலும், அது எங்கள் கட்சி தலைவி குடும்பத்தை குறிக்கிறது என்று முந்திரி கொட்டை போல காங்கிரஸ் குதிப்பதால்தான் அந்த குடும்பத்தின் சட்ட விரோத செயல்கள் தொடர்புகள் குறித்த ஐயம் கூட உறுதியான ஒன்றே என் எண்ணத்தை தோற்றுவிக்கிறது..


Narasimhan
மார் 26, 2025 18:35

இதை மற்ற கட்சிகள் கேட்கட்டும். காங்கிரஸ் ஒரு டம்மி கட்சி.


எவர்கிங்
மார் 26, 2025 18:29

அமீத் சொன்னதில் தவறு எதுவுமில்லை..... சில வருடங்கள் முன்பு நிர்மலா சீதாராமன் பேசிய விவாதத்தில் இத்தாலிகாரியின் மானம் கப்பல் ஏறி போய்விட்டது


காஷ்மீர் கவுல் பிராமணன்.ஷோபியான்.
மார் 26, 2025 18:16

சோனியா என்ற வெளிநாட்டு பெண்மணி பிரதமர் பற்றி அவதூறு பேசிய போது ரமேஷ் நீ இருந்தாயா?


TRE
மார் 26, 2025 17:57

அமித்ஷா ஜட்ஜ் லோயா கொலை செய்ய பட்ட வழக்கில் காங்கிரஸ் தப்பவிட்டது மாபெரும் தவறாகிவிட்டது


சமீபத்திய செய்தி