உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒருவரோடு ஒருவர் சண்டையிட வைப்பதே காங்., குணம்: விளாசினார் பிரதமர் மோடி

ஒருவரோடு ஒருவர் சண்டையிட வைப்பதே காங்., குணம்: விளாசினார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'வெவ்வேறு ஜாதியினரை ஒருவரோடு ஒருவர் சண்டையிட வைப்பதே காங்கிரசின் குணம்' என பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நவ.,20ம் தேதி நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு ஆசிர்வாதம் வாங்க வந்துள்ளேன். மஹாராஷ்டிரா மக்களுக்கு பா.ஜ., மீது நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.,வை முழு மனதுடன் ஆதரித்துள்ளீர்கள். பா.ஜ.., மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, நாட்டின் மீது அவர்களுக்குள்ள அன்பு மற்றும் அரசியல் பற்றிய புரிதலின் காரணமாகும். வெவ்வேறு ஜாதியினரை ஒருவரோடு ஒருவர் சண்டையிட வைப்பதே காங்கிரசின் குணம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nx9l4xj6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எஸ்.சி., மற்றும் பழங்குடியின சமூகங்களை வெவ்வேறு ஜாதிகளாக காங்கிரஸ் பிரித்தது. காங்கிரஸ் ஆட்சி எங்கு அமைந்தாலும், அந்த மாநிலம் அக்கட்சியின் ஏ.டி.எம்., ஆக மாறும். மஹாராஷ்டிராவை காங்கிரசின் ஏ.டி.எம்., ஆக மாற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மகா அகாஸ் விகாடி என்றால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் செய்வது தான் அர்த்தம். 2019ம் ஆண்டு இதே நாளில் நாட்டின் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் தொடர்பான தீர்ப்பை வழங்கியது. இந்த நாள் வரலாற்று சிறப்பு மிக்க நாள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
நவ 09, 2024 21:11

போருக்கான நேரமில்லைன்னு போர்தளவாடங்களை யாரு விக்கிறாங்க? இண்டர்நேஷனல் லெவல்ல எல்லோரும் சண்டைக்கு தயாராக்கிட்டிருக்கோம்.


S.Martin Manoj
நவ 09, 2024 19:28

உங்கள விடவா... மணிப்பூர் இன்னும் பத்தி எரிஞ்சுகிட்டு இருக்கு.


Kumar Kumzi
நவ 09, 2024 19:41

சோத்துக்கு மதம் மாறிய , பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டதே கொங்கிரஸ் கொங்கிரஸ்காரனுங்க தான்


veeramani hariharan
நவ 09, 2024 18:31

What Britisher policy, I.e. divide and Rule is now Congress policy. No doubt about it. This eism and religion ? is Congress main policy


Kanagaraj Easwaran
நவ 09, 2024 17:40

உண்மை சொன்னால் வலிக்கிறதா உங்களுக்கு? காங்கிரஸ் ஆண்டபோது செய்யாத அயோக்கியத்தனம் இல்லை ? பாஜக செய்யாததை எல்லாம் சொல்லி அவதூறு செய்வதே காங்கிரஸ் திமுக கம்மிகளின் வேலையாக உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த ஆபத்து அந்த ஆபத்து என்று கதை விடுகிறார்கள். செய்யமுடியாததையெல்லாம் சொல்லி ஒட்டுக்கேட்கிறார்கள் அவர்கள். அதுதான் குற்றம். மோடி உண்மை பேசுகிறார். நன்மை செய்கிறார்.


GMM
நவ 09, 2024 17:09

வெற்றிக்கு வாக்கு பெற சாதி மத சலுகைகள் அதிகம் அறிவிக்கும். மக்களை பிரித்து மோதல் உருவாக்கும் கட்சி காங்கிரஸ். இலவசம், தள்ளுபடி வாரி வழங்கும். இனியாவது உச்ச நீதிமன்றம் பொருளாதாரம், பாதுகாப்பிற்கு முக்கியம் கொடுத்து தீர்ப்பு வழங்குமா ? இலவசத்தை தடை செய்ய என்ன தயக்கம்.? இலவசம் அடுத்த தேர்தலுக்கு பின் அமுல் படுத்த உத்தரவு போட முடியும்.


K.n. Dhasarathan
நவ 09, 2024 16:50

பிரதமரே உங்கள் சாதனைகளை சொல்லி ஒட்டு கேளுங்கள், அடுத்த கட்சியை கேவலமாக பேசுவது, பிரெக் இல்லாத வண்டி என்பது, சண்டையை மூட்டி விடுவது போன்ற மட்ட ரகமான வேலைகளை விடுங்கள். உங்கள் வண்டி டபுள் என்ஜின், இப்போ ட்ரப்புல் என்ஜின் ஆனது, அயோத்தி காலை வாரி விட்டது, திருக்குறள் சொல்லி தமிழக மக்களிடம் ஏமாந்து போனது என்பது போல உங்கள் கதைகள் எங்களிடம் ஏராளம். இதில் "பிரதமர் விளாசினார்" என்கிற தலைப்பு வேறு, நகைசுவையே தனி


Sundar R
நவ 09, 2024 16:26

காங்கிரஸ் என்றால் ஆயிரம் கோடி ஊழல் என்கிறார். திமுகவின் உலக மஹா ஊழலை தமிழகத்தில் ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் காணமுடிகிறது. மதுபான ஊழலில் கேஜ்ரிவாலை நடத்தியதுபோல ஊழல் நடக்கும் மற்ற மாநிலங்களை நடத்தாமல் மோடிஜி ஆட்சி செய்வது வருத்தம் அளிக்கிறது. இந்த விஷயத்தில் மோடிஜியை விட 1975 இந்திரா காந்தி அவர்கள் மாதிரி இருந்தால்தான் மக்களிடம் நன்மதிப்பைப் பெறமுடியும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 09, 2024 14:57

பிஜேபி தலைவர்களில் யாருக்குமே, மக்களுக்கு நலத்திட்டங்கள் என்ன செய்தோம் என்ன செய்வோம் என்று பேசவே தெரியாது. எப்போ பார்த்தாலும் காங்கிரஸ், பாக்கிஸ்தான், ராமர், நேரு. இவ்ளோ தான் இவங்க vocabulary. மகாராஷ்டிரா வில் 100 க்கு 20 மார்க் எடுத்தால் பாஸ் என்று, போன வாரம் ஆர்டர் போட்டு விட்டார்கள். ஏனோ அது பற்றி யாரும் ஏனோ செய்தியும் போடவில்லை. இதோ தேர்தல். பிஜேபி அறிவித்த இலவசங்கள் பற்றி பேசுவார்களா? இல்லை. காங்கிரஸ் பற்றி மட்டும் தான்.


hari
நவ 10, 2024 06:29

பொழுதுபோக்கு வைகுண்டம், இங்கே தமிழ் தேர்வில் தேர்ச்சி எவளோ தெரியுமா?


MARI KUMAR
நவ 09, 2024 14:36

சண்டை போட வைப்பதும் கோள் மூட்டி விடுவதும் காங்கிரசுக்கு கைவந்த கலை,


SANKAR
நவ 09, 2024 17:12

who made Sharad and Alit to fight and split party..in Jharghand what happened?Punjab ..Amrinder? Kashmir Ghulam Nabi Azad?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை