உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பிக்கையை தரும் அரசியலமைப்பு சட்டம்: பார்லியில் பிரியங்கா பேச்சு

நம்பிக்கையை தரும் அரசியலமைப்பு சட்டம்: பார்லியில் பிரியங்கா பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது' என பார்லிமென்டில் பிரியங்கா பேசினார். இது பார்லிமென்டில் அவரது முதல் உரை.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ., 25ம்தேதி தொடங்கியது. இன்று (டிச.,13) அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதம் நடந்தது. அப்போது, லோக்சபாவில் வயநாடு எம்.பி., பிரியங்கா பேசியதாவது: அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்துள்ளது. அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாத், ராஜாஜி பங்களிப்புடன் அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. எவ்வளவோ சவால்கள் இருந்தும் மகளிர் போராட அரசியல் சாசனம் தைரியம் தருகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் பலனால் எளியோர் போராட முடிகிறது.

இட ஒதுக்கீடு

மத்திய அரசு வாஷிங் மெஷின் அரசு. ஹிமாச்சல்லில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தது யார்? கோவா அரசை கவிழ்த்தது யார்? எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக நண்பர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறையை பயன்படுத்தி தவறான வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. தனியார்மயமாக்கல் உள்ளிட்டவை மூலம் இந்த அரசு இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மக்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தலில் தெரிந்து கொண்டார்கள். கோடிக்கணக்கான இந்தியர்களின் போராடி வருகின்றனர். அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை நமது அரசியலமைப்பு சட்டம் தருகிறது. நமது அரசியலமைப்பு சட்டம் நாட்டு மக்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம், அது நீதி, ஒற்றுமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் கவசம் என்பதை நான் புரிந்துகொண்டேன். வருத்தமான விஷயம் என்னவென்றால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புக் கவசத்தை உடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு உள்ளனர். இவ்வாறு பிரியங்கா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Venkatesan Srinivasan
டிச 15, 2024 00:03

ஃபெரோஸ் கான் - ஃபெரோஸ் காந்தியாக உருமாற்றம் அடைந்து இவர்களின் பெயரில் தொற்றிக் கொண்டது. இது சாதாரண பெயர் மாற்ற யுக்தி. குஜராத்தில் நிறைய பேர் காந்தி என்ற குடும்ப பெயரில் உள்ளனர். நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மன் பல நூற்றாண்டுகளாக உள்ளார். இந்த போலி கும்பல்களை கேட்டால் இவர்களை கொண்டுதான் அம்மனுக்கும் பெயர் வந்ததாக உருட்டுவார்கள்.


R.MURALIKRISHNAN
டிச 13, 2024 21:41

நீர் என்ன கூவினாலும்


ராமகிருஷ்ணன்
டிச 13, 2024 20:34

அரசியல் அமைப்பு சட்டம் மற்றவர்களுக்கு. காங்கிரஸ்காரர்கள் அரசியல் அமைப்பை சிறிதும் மதித்தது இல்லை. இதெல்லாம் பேசுது. நேரம்


Mohan
டிச 13, 2024 20:02

சும்மா சும்மா அரசியலமைப்பு சட்டம், அதுவாக்கும், இதுவாக்கும்னு சொல்ற பெண்ணே உங்களோட பாட்டி, கொள்ளுத்தாத்தா இரண்டு பேரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கந்தல் துணி மாதிரி ஆக்கியது உங்களுக்கா தெரியலை. 1991 ல் பங்குசந்தை ஊழல் பேர்வழி ஹர்சத் மேத்தாவை வளர விட்ட கட்சி காங்கிரஸ் தான். எல்லா தப்பும் அழுக்கும் காங்கிரஸ் மீது தான் உள்ளது. இதுல இந்தம்மா பொருளற்ற வெட்டி சொற்பொழிவு


பேசும் தமிழன்
டிச 13, 2024 19:29

உங்கள் பாட்டி இந்திரா..... அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து.... எமெர்ஜென்சி கொண்டு வந்தார்.... மோடி அவர்களின் ஆட்சியில் ஜனநாயகம் காக்கப்படுவமதால் தான் உங்களால் இப்படி கூப்பாடு போட்டு கொண்டு இருக்க முடிகிறது... இதே கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால்..... எதிர்கட்சி ஆட்கள் எல்லாம் உள்ளே ஜெயிலில் தான் இருந்து இருப்பார்கள்.....மோடி அவர்கள் நல்லவர்... அதனால் உங்களை ஒன்றும் செய்ய மாட்டார்.... நீங்கள் கூப்பாடு போட்டு கொண்டு இருக்கலாம்.


GoK
டிச 13, 2024 18:19

இவரை தேர்ந்தெடுத்தவர்கள் தங்களுக்கு எதுவும் இல்லை என்பதை நிருபித்திருக்கிறார்கள்.


krishna
டிச 13, 2024 18:09

INDHA DESA VIRODHA MAFIA MAINO CONGRESS KUMBALUKKUM ARASIYAL AMAIPPU SATTATHUKKUM ENNA SAMMANDHAM.AGILA ULAGA KOMALIGAL PAPPY PAPPU COMPLETE USELESS ENA IVANGA DESIGNILEYE ULLA I.N.D.I KOOTANIYE IVARGALAI THEVAI ILLADHA AANI ENA SOLGIRADHU.


Tetra
டிச 13, 2024 17:50

இந்த அம்மையாரின் கொள்ளு தாத்தா நேருவிலிருந்து பாட்டி இந்திரா தந்தை ராஜீவ் கான் வரை அரசியலமைப்பை நாசப்படுத்தி அது போதாதா? இந்த பிள்ளைகள் ஒழுங்காக படிக்காதவர்கள். இவர்கள் கையில் நாடு அகப்பட்டால் நாசம் நாட்டுக்குத் தான். இவர்கள் இத்தாலியில் இருப்பார்கள்


Madras Madra
டிச 13, 2024 17:28

மத சார்பற்ற என்ற வார்த்தையை நீங்க தான் செருகினீர்கள் அதனால பல பிரச்சினைகள்


M S RAGHUNATHAN
டிச 13, 2024 17:19

நேரு குடும்பம் அரசியல் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தது சரித்திரம். அதை இந்த குழந்தை படிக்க வேண்டும். என்னவோ, இவர்கள் குடும்பம் தான் நாட்டை காக்க வந்த தேவதைகள் போல வேஷம் போடுகின்றனர். முதலில் இவர்கள் பெயரின் பின்னால் இருக்கும் " காந்தி" என்ற வார்த்தையை ஏன், எப்படி வைத்துள்ளார்கள் என்று சொல்லட்டும். ஏற்கனவே, இவள் தாயும், தமையனும் பிணையில் இருக்கிறார்கள்.


SANKAR
டிச 13, 2024 18:37

Her grandfather's name was Feroz GANDHI.His son was Rajiv GANDHI.His daughter is Priyanka GANDHI.Pothuma?


SANKAR
டிச 13, 2024 23:43

there is one Feroz Varun GANDHI in BJP.He is son of late Sanjay GANDHI and Msneka GANDHI.Ask them too about their names.Gandhi Modi are clan or family names.There was one Syed Modi a sprtsman.You feel he should not suffix the name MODI ?!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை