உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்; கட்டுமான நிறுவனத்துக்கு தடை

தேசிய நெடுஞ்சாலையில் விரிசல்; கட்டுமான நிறுவனத்துக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்:கேரளாவில் தென் மேற்கு பருவ மழை இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டு, முடியும் தருவாயில் உள்ள என்.எச்., 66 எனும் தேசிய நெடுஞ்சாலை 66ல் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, அந்த சாலையின் கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் பன்வல் என்ற இடத்தில் துவங்கும் என்.எச்., 66 சாலை, தமிழகத்தின் கன்னியாகுமரியில் முடிவடைகிறது. மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் வழியாக போடப்பட்டுள்ள இந்த ஆறு வழிச்சாலை, நாட்டின் மேற்கு பகுதியில் முக்கிய வழித்தடமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், கேரளாவின் மலப்புரம், காசர்கோடு, கோழிக்கோடு, திருச்சூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழை உள்ளிட்ட பாதிப்புகளால் நெடுஞ்சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.பருவமழை இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், இந்த சாலையின் பல இடங்களில் சர்வீஸ் சாலைகளில் சேதம் ஏற்பட்டு இடிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் பாலங்களில் ஏற்பட்டுள்ள விரிசல், பயணியரை அச்சுறுத்துகிறது.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த சாலையின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக் ஷன் என்ற நிறுவனத்துக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனம் இனி கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாத திட்ட மேலாளர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் சஸ்பெண் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Mohana Sundaram
மே 23, 2025 17:44

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆரம்பித்த காலத்தில் இருந்த தரம், அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் இல்லை. இந்த தவறு ஒப்பந்தம் மதிப்பீடு தயாரிப்பு முதல் அனைத்து துறைகளிலும் சரியான விசாரணை நடத்தி சரி செய்ய வேண்டும். வருத்தம் அளிக்கிறது.


Saravana
மே 23, 2025 09:56

சரி இது ஊழலால் தான் ஆனால் tasmoc போல மறைக்க பட வில்லை


D Natarajan
மே 23, 2025 07:39

KNR கம்பெனி தலைவரை உடனே கைது செய்ய வேண்டும். NHAI அதிகாரிகளை விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்


James Mani
மே 23, 2025 10:46

சார் திமுக காரணம் என்று மக்கள் நம்புகிறர்கள்


அப்பாவி
மே 23, 2025 07:32

படத்தப் பாத்தா சாதாரண விரிசல் மாதிரியா இருக்கு? மொத்தமா இடிஞ்சு விழுந்த மாதிரி தெரியுதே?


venugopal s
மே 23, 2025 07:22

பெயருக்கு ஏற்றாற் போல் பெரிதாக ஏப்பம் விட்டு இருப்பார்கள் போல் உள்ளதே!


Ram
மே 23, 2025 07:03

அரசியல்வாதிகளின் குடும்பத்தாரர்களுக்கு ஒப்பந்தம் கொடுப்பதால்தான் இதுபோன்று நிகழ்கிறது , எல் அண்ட் டீ மற்றும் வேறு உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கொடுக்கவேண்டும்


the first mind
மே 23, 2025 05:03

இது ஊழல் இல்லையா? மத்திய அரசிற்கு பங்கில்லையா?


Tetra
மே 23, 2025 10:07

இல்லை. உடனே சஸ்பெண்ட்‌ஒப்பந்த ரத்து என்று நடவடிக்கை எடுத்துள்ளார்கள். ஒரு வேளை கட்டியது த்ராவிடமோ.


ஜெய்ஹிந்த்புரம்
மே 23, 2025 04:57

ஓ மை காட்.. இது விரிசலா? பூகம்பம் வந்த மாரி இருக்கு. இதை இப்படி அடக்கி வாசிப்பதன் நோக்கம் என்னவோ? ஒன்றியத்துக்கு நல்ல கமிசனா?


Kasimani Baskaran
மே 23, 2025 03:59

ஓவராக கண்காணித்து விட்டார்கள் போல தெரிகிறது. வேலையை விட்டு தூக்குவதை விட்டுவிட்டு என்ன செய்தாலும் பயன் இருக்காது..


ஜெய்ஹிந்த்புரம்
மே 23, 2025 06:53

ஒன்றியம் நல்லா லஞ்சம் வாங்கி தின்னுருக்கு..


தாமரை மலர்கிறது
மே 23, 2025 01:29

பருவநிலை மாற்றம் கடுமையாக நிகழ்வதால், இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் கூட அடிக்கடி நடக்கின்றன. மேற்கொண்டு கவனம் செலுத்தி, சிறப்பாக செயல்பட வேண்டிய தருணம் இது.


Elango
மே 23, 2025 09:31

பருவ நிலை மாற்றத்தால் பூக்கள் கூட கருகி விடும் நீரில் பூக்கும் பூக்கள் கூட


முக்கிய வீடியோ