உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது: மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் வலியுறுத்தல்

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது: மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டில்லியில் சந்தித்தார். அப்போது மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார்.தமிழகம் - கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. 32வது காவிரி மேலாண்மை கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான 45 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தர வேண்டும் என நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் வலியுறுத்தினார். இந்நிலையில், இந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமைச்சர் துரைமுருகன் டில்லி சென்றார்.மாலையில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர் பங்கீடு குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது எனவும் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். இச்சந்திப்பின்போது, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் மற்றும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Godyes
ஜூலை 26, 2024 10:17

இதுமட்டும் கேக்கதான் இவர் மந்திரி.


krishnan
ஜூலை 25, 2024 19:58

ஒன்றியம் , கூந்தல் , என அரை வேக்காட்டு தனமாக பேசாமல் மத்திய அரசிடம் நல்ல உறவு கொன்டு நிறைய ப்ரொஜெக்ட்கள் பெற துரை முருகன் போன்ற மூத்தவர்களை அரசின் டெல்லி பிரதிநிதியாக , முதல்வர் அறிவிக்க வேண்டும்


கூமூட்டை
ஜூலை 25, 2024 19:31

இது ஜால்ரா அடிக்க மாடல் ஈ டீ வரும் தன்னை காக்க RSB Media அணை என்று தவறுதலாக செய்திகள்


I am a Sanghi + Kafir…but not a Family slave
ஜூலை 25, 2024 19:02

ஓங்க கூட்டு களவாணி தானே கர்நாடக அரசு அவங்க கிட்ட பேசுங்க. ஏன் ஒன்றிய அரசு கிட்ட பேசறீங்க ?


sureshpramanathan
ஜூலை 25, 2024 19:01

All river management and all dams in the country should be brought under one central Ministry like National Highways


பேசும் தமிழன்
ஜூலை 25, 2024 19:00

நீங்கள் எதற்க்கு காதை சுற்றி மூக்கை தொட்டு கொண்டு.... பேசாமல் இந்தி கூட்டணியில் இருக்கும் கான் கிராஸ் கட்சி சோனியா மற்றும் ராகுல்.... அவர்களிடம் கோரிக்கை வைக்கலாமே ???.... கான் கிராஸ் கட்சி தானே மேகதாது அணை கட்ட வேண்டும் என்று அலைகிறார்கள் ???


கடுகு
ஜூலை 25, 2024 18:44

பெங்களூர் போய் உங்க கூட்டணி கட்சியை சந்திச்சி மேட்டரை முடிச்சிருக்கலாமே!


Bala
ஜூலை 25, 2024 18:23

ஏன், பக்கத்தில் பெங்களூருவில் உங்கள் நட்பு கூட்டணி கட்சி ஆட்சிதானே.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ