உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி

திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, விடுதலை போராட்ட தியாகிகள் திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை; இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழகத்தைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=asywoafh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார். இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாசார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

T.sthivinayagam
அக் 04, 2025 19:57

பீகார் உபியை போல தமிழகத்திலும் அதிக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் தேச ஒற்றுமை ஊக்கமளிக்கும்


rajan
அக் 04, 2025 21:04

If corruption is ruted out and utilise the funds for development Central Goct will release funds. It is a well kniwn fact since 1969 corruption in all depts as the politicians involved in corript practices.


K
அக் 04, 2025 21:38

நல்ல வார்த்தை


Indian
அக் 04, 2025 22:02

மிக சரியாய் சொன்னீர்கள்


Indian
அக் 04, 2025 19:16

கரூரில் இறந்தவர்களுக்கு வெறும் இரணடு லட்சம் ???? .


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
அக் 04, 2025 20:08

ஒரு கூட்டம் எவருக்கும் சொந்த பெயர் இல்லை ஏன் ?


joe
அக் 04, 2025 18:21

எல்லாம் பேசுவதற்கு நல்லதாக உள்ளது .ஆனால் திருப்பூர் குமரன் சாகும் போது சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் , அவர் இருந்த தெருவிலேயே பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார் . அடுத்தவர்களுக்கு உண்மையாக உதவவேண்டும் . மற்றவர்களை காரணம் காட்டி தன்னை உயர்த்தி காட்டி கொள்வது மக்களை பிற்போக்குப்படுத்துவதற்கு சமம்.உண்மையை அறிந்து மற்றவர்களுக்கு உதவவும்.


Natchimuthu Chithiraisamy
அக் 04, 2025 18:10

ஒரு இந்திய பிரதமர் தமிழ் நாட்டில் வாழ்ந்த விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களின் செய்தியை படித்து நினைவில் வைத்து பேசுவது என்பதே பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு தெரியுமா ?


பாலாஜி
அக் 04, 2025 18:01

நரேந்திரமோடிக்கு தமிழ்நாடு சுதந்திர போராளிகள் பற்றி தெரியும் என வெளிப்படுத்தியுள்ளார்.


Narayanan Muthu
அக் 04, 2025 20:14

எழுதி கொடுத்ததை படிப்பதற்கெல்லாம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.


Sundar R
அக் 04, 2025 17:27

தமிழக மக்கள் வழிபடக்கூடிய மாபெரும் இரு தேசியவாத சுதந்திரப் போராட்டப் பெருந்தலைவர்களான திருப்பூர் குமரன் அவர்களையும், சுப்பிரமணிய சிவா அவர்களையும் பாராட்டி மோடிஜி அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளது பாராட்டுதலுக்கும், நன்றிக்கும் உரியது. திருப்பூர் குமரன் அவர்கள் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சுப்பிரமணிய சிவா அவர்கள் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். தற்போதுள்ள முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த 90 சதமானம் பேர்கள் திருப்பூர் குமரன் அவர்கள் வகுத்துக் கொடுத்த தேசியவாத பாதையிலிருந்து அடியோடு மாறி, திராவிடர்கள் என்று தங்களை கூறிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டு தமிழகத்தை நாசமாக்குகிறார்கள். தற்போதுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் 50 சதமான பிராமணர்கள் சுப்பிரமணிய சிவா அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையிலிருந்து தடம் புரண்டு, ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போட்டு தமிழகத்தை நாசமாக்குகிறார்கள். சில பிராமணர்கள் கருணாநிதி குடும்பத்தினரிடம் சென்றால், பிராமணர்களின் பிரச்சினைகள் தீரும் என்று நம்பி ஏமாந்து வருந்துகிறார்கள். கருணாநிதி குடும்பத்தினரால், பிராமணர்களின் பிரச்சினைகள் தீராது. மற்ற சமுதாய மக்களாலும், பிராமணர்களின் பிரச்சினைகள் தீராது. பிராமணர்களின் பிரச்சினைகளை அவர்கள் தான் சரிசெய்து கொள்ள வேண்டும். ஒற்றுமை. ஒற்றுமை. ஒற்றுமை. மோடிஜி அவர்கள் கூறிய இரு பெருந்தலைவர்களான திருப்பூர் குமரன் அவர்கள் மற்றும் சுப்பிரமணிய சிவா அவர்கள் ஆகியோர் வகுத்துக் கொடுத்த நேர்வழியில் செல்ல வேண்டுமென்றால், முதலியார் மற்றும் பிராமண சமுதாயத்தினர்கள், திராவிடர்கள் இருக்கும் விசையே வேண்டாம் என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு தேசியவாத பாதையில் சென்றால் , இது அவர்களின் அடுத்த வம்சத்தின் குழந்தைகளுக்கு‌ம் நல்வழி காட்டியது போல் ஆகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை