உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா குறித்து சர்ச்சை கருத்து: மத்திய அமைச்சருக்கு கண்டனம்

கேரளா குறித்து சர்ச்சை கருத்து: மத்திய அமைச்சருக்கு கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம் : கேரளா குறித்து கூறிய கருத்துக்கு மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மன்னிப்பு கேட்க, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வலியுறுத்தியுள்ளது.மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கேரளாவுக்கான எந்த ஒரு திட்டமும் இல்லை என, கேரளாவில் ஆளும் மார்க்., கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.இதுகுறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன், 'சாலைகள், கட்டமைப்பு வசதிகள், கல்வி போன்றவற்றில் மாநிலம் பின்தங்கியுள்ளது என்று அறிவியுங்கள். 'நிதிக் கமிஷன் ஆய்வு செய்து பரிந்துரை செய்யும். அதனடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கும்' எனக் குறிப்பிட்டார்.இதற்கு, காங்கிரசைச் சேர்ந்த கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தன் பேச்சுக்கு மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மன்னிப்பு கேட்க வேண்டும். கேரளாவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அவர், அந்தப் பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழந்து விட்டார். அவரது கருத்தை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஏற்கின்றனவா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

பேசும் தமிழன்
பிப் 03, 2025 19:34

அவர் உண்மையை தானே கூறி இருக்கிறார்..... கான் கிராஸ்.... கம்யுனிஸ்ட் கட்சிகள்.... கேரளா மாநில மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று ஒப்பு கொள்ள வேண்டியது தானே !!!


Jagadeesan Ramasamy
பிப் 03, 2025 18:51

மத்திய அமைச்சரின் கருத்து முற்றிலும் சரி.மேடைதோறும் கேரளா அனைத்துறகளிலும் முன்னேறியுள்ளது என்று மார்தட்டிகொள்வது. மத்திய அரசு சாலை போக்குவரத்து போன்றவைகளுக்கு மத்திய தொகுப்பிலிருந்து நிதி வழங்கும் பொழுது வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு முன்னுரிமையாக நிதி வழங்கும் போது தான் நாடு சமச்சீரான வளர்ச்சியையும் அடையும்.அது தான் உண்மையான சமூகநீதி.


Sridhar
பிப் 03, 2025 12:24

மொதல்ல, இந்த கருத்துல என்ன சர்ச்சை இருக்கு?


ஆரூர் ரங்
பிப் 03, 2025 11:31

முன்னேறிய சமூகம் என்ற காரணம் கூறி சலுகைகள் மறுக்கப் படுகிறது. அது போல முன்னேறிவிட்ட மாநிலம் என்று மார்தட்டிக் கொண்டால் அனுதாபம் கிடைக்குமா? மத்திய அரசு பாத்திரமறிந்து தான் பிச்சையிடும்.


Barakat Ali
பிப் 03, 2025 09:58

ஜார்ஜ் குரியன் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது ????


VENKATASUBRAMANIAN
பிப் 03, 2025 07:43

இதில் எங்கே கேரளா மாநிலத்தை இழிவுபடுத்தி உள்ளார். நிதி குழு பரிந்துரை செய்யும் என்றுதானே கூறியுள்ளார். முட்டாள்களா கேரள காங்கிரஸார்


Kasimani Baskaran
பிப் 03, 2025 06:39

கோணல்புத்தியுள்ள கம்மிகளுக்கு எதைச்சொன்னாலும் பொறுக்காது...


முக்கிய வீடியோ