உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சை ஐ.ஏ.எஸ்., பூஜா கேத்கர் மத்திய அரசு பணியிலிருந்து விடுவிப்பு

சர்ச்சை ஐ.ஏ.எஸ்., பூஜா கேத்கர் மத்திய அரசு பணியிலிருந்து விடுவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை : சர்ச்சை ஐ.ஏ.எஸ். ,அதிகாரி பூஜா கேத்கர், மத்திய அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர் யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 821வது இடத்தை பிடித்து பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்து, புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.அரசால் வழங்கப்படாத வசதிகளை அத்துமீறி பெற்று தன் சொகுசு காரில் அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கு பயன்படுத்தியது, ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை முறைகேடாக சமர்ப்பித்தது என அடுத்தடுத்து புகார்களில் சிக்கினார்.இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு நபர் கமிஷனை சமீபத்தில் அமைத்தது. சர்ச்சையில் சிக்கிய பூஜா கேத்கர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதை தவிர்க்க முன்ஜாமின் கோரி கோர்ட்டில் மனு செய்துள்ளார்.இந்நிலையில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த உரிய விதிமுறைகளின் கீழ் மத்திய அரசு பணியிலிருந்து பூஜா கேத்கர் விடுவிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Azar Mufeen
செப் 08, 2024 14:42

அமித்ஷா உடனே பிஜேபியில் சேர்த்து கொள்வார்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 08, 2024 12:15

ராகுல் காந்தி உடனடியாக காங்கிரஸில் சேர்த்து கொள்வார்.


Lion Drsekar
செப் 07, 2024 22:00

கவலையே வேண்டாம் எங்கள் ஆட்டில் குரூப் 1 தேர்வில் இதே போல் பணியில் சேர்ந்தவர்கள் நீதிமன்றம் தீர்ப்பு எல்லாம் வந்தது ஆனால் அவர்கள் பணியிடம் செய்யப்படவில்லை, தவறு செய்தது உண்மை என்றால் வெற்றி உங்களுக்கே. துன்பங்கள் என்பது நேர்மையானவர்களுக்கும், நாட்டுப்பற்று உடையவர்களுக்கு மட்டுமே ,ஆகவே தங்களுக்கு வெற்றி நிச்சயம், விடுபட்ட ஆடுகளுக்கான சம்பளமும் சேர்த்து , பணியிலேயே இல்லாமல் இருந்தாலும் , தாங்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பதவி உயர்வு , எல்லாமே விரைவில் கிடைக்கும், வாழ்க வளமுடன், வந்தே மாதரம்


chennai sivakumar
செப் 07, 2024 20:34

தூக்கி உள்ளே ஒரு 10 வருடம் போட்டு எதிர்காலத்தை சூனியமாக ஆக்கி இருக்க வேண்டும்


அப்பாவி
செப் 07, 2024 19:24

காங்கிரசில் சேரலாம். சீட் கேரண்டி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை