உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்ச்சை பேச்சு: பா.ஜ., வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்கு

சர்ச்சை பேச்சு: பா.ஜ., வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : ஏ.ஐ.எம்.ஐ.எம்., மூத்த தலைவர் அக்பருதீன் ஓவைசி பேச்சுக்கு பதிலடியாக பேசிய சம்பவத்தையடுத்து பா.ஜ., பெண் வேட்பாளர் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் லோக்சபா தொகுதிக்கு மீண்டும் போட்டியிடும் ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசியை எதிர்த்து பா.ஜ., வேட்பாளராக மாதவி லதா போட்டியிடுகிறார். இந்நிலையில் ஓவைசி கடந்த 2013ம் ஆண்டு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் ஹிந்துக்களை குறி வைத்து, '15 நிமிடங்களுக்கு போலீஸ் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்; எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுகிறோம்' என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.இதனை நினைவுப்படுத்தி நடந்த பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில் மாதவி லதாவை ஆதரித்து மஹாராஷ்டிரா அமராவதி லோக்சபா தொகுதி பா.ஜ. வேட்பாளரும், நடிகையுமான நவ்னீத் ராணா பேசுகையில், . உங்களுக்காவது, 15 நிமிடங்கள் தேவை; எங்களுக்கு 15 வினாடிகள் போதும் என்றார். இவரது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து போலீசில் புகார் கூறப்பட்டதாக கூறப்படுகிறது. ஷாத் நகர் காவல் நிலைய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் நவ்னீத் ராணா மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

subramanian
மே 11, 2024 04:54

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை பாரத நாட்டின் சுகம் அனுபவித்து வருகின்றனர் அன்னிய நாட்டு கை கூலிகள்


subramanian
மே 11, 2024 04:46

பாரதத்தின் இறையாண்மைக்கு எதிராகவும், அரசியல் சட்டத்தை மீறியும் , மத நல்லிணக்கம், தேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசும் ஓவைசி, அவன் தம்பியை நாடு கடந்த வேண்டும்


J.V. Iyer
மே 11, 2024 04:15

சிம்பைவிட்டு வாலைப்பிடிப்பதே இவர்கள் தொழிலாகிவிட்டது முதலில் சொன்னவனை கைதுசெய்யுங்கள் அதற்குத்தான் இவர் பதில் சொல்லியிருக்கிறார் நீதி எங்கே?


Syed ghouse basha
மே 11, 2024 01:28

இவர் இப்போவே இப்டினா ஒருவேளை ஜெயிச்சா என்ன பண்ணுவார் இவர்களை போன்றவர்களிடமிருந்து இந்தியமக்கள் தான் நாட்டை காப்பாத்த வேணும்


Krish
மே 11, 2024 00:45

அப்ப ஒவைசி சொன்னது கரெக்டா? என்ன தண்டனை பெற்றார்?


Bala
மே 11, 2024 00:36

இதுபோன்ற விஷயங்களில் சட்டம் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பது என் கருத்து முதலில் யார் இதுபோல் பேசுகிறார்களோ அவர்களே முதல் குற்றவாளிகள் அவர்களே கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் பின்வரும் பேச்சுகள் அனைத்தும் எதிர்வினை மட்டுமே எதிர்வினை ஆற்றவில்லை என்றால் முதலில் பேசியவர்களை மேலும் மேலும் இதுபோல் தவறாக பேசத்தூண்டும் அதனால் வரக்கூடிய விளைவுகளுக்கு யார் பொறுப்பு ? எதிர்வினை ஆற்றுபவர்களை ஒரு முறை எச்சரித்து விட்டுவிடலாம் இதுபோல் திரும்பவும் இரண்டாவது முறை பேசினால் இவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே


Venkataraman
மே 10, 2024 23:50

இவர்மேல் ஏன் வளக்கு பதிவிட வேண்டும்? இதற்கு முன்பு ஒவைசியின் தம்பி இந்துக்களை மிரட்டும்படி பேசியபோது அவர்மேல் ஏன் வழக்கு போடவில்லை?


vijai seshan
மே 10, 2024 23:45

அப்ப அந்த பாய் பேசுனதுக்கு என்ன பதில்


Kasimani Baskaran
மே 10, 2024 23:31

எதிரணிக்கு முற்றி விட்டது


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி