உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜன்லோக்பாலே சிறந்தது: மாஜி முதல்வர் கல்யாண்சிங்

ஜன்லோக்பாலே சிறந்தது: மாஜி முதல்வர் கல்யாண்சிங்

லக்னோ: வலுவான லோக்பால் மசோதா ஒன்று தான் ஊழலை ஒழித்து கட்ட வழிவகுக்கும். எனவே அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள ஜன்லோக்பால் மசோதாவை பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதத்திற்கு எடுத்துகொண்டு சட்டமாக நிறைவேற்றப்பட வேண்டும் என , ஜனகிராந்தி கட்சித்தலைவரும், உத்தரபிரதேச மாஜி முதல்வருமான கல்யாண்சிங் தெரிவித்தார். ‌லக்னோவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது அரசு தயாரித்துள்ள மசோதா ஊழலைமுற்றிலுமாக ஒழிக்க போதுமானதாக இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் இடையூறாக இருப்பது ஊழல் தான். இவற்றினை ஒழிக்க சமூக ஆர்வலர்கள் தயாரித்துள்ள ஜன்லோக்பால் மசோதா தான் சிறந்தது. இதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசு உடனடியாக இந்த மசோதாவிற்கு மதிப்பளித்து சட்டமாக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்