உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

புதுடில்லி : நாடு முழுதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பாதிப்பு எண்ணிக்கை 1,009 ஆக அதிகரித்துள்ளது. கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. கொரோனா தொற்று சமீபகாலமாக தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நம் நாட்டிலும் கடந்த 10 நாட்களாக அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது.மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுதும் நேற்று 1,009 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை, 257 பேருக்கு மட்டுமே தொற்று பரவிய நிலையில், மேலும் 752 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டில்லியில் 104 பேருக்கும், மஹாராஷ்டிராவில் 209 பேருக்கும், கேரளாவில் 430 பேருக்கும் தொற்று ஏற்பட்டுஉள்ளது.குஜராத்தில் 83 பேருக்கும், தமிழகத்தில் 69 பேருக்கும், கர்நாடகாவில் 47 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக அதிகரித்து வரும் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை என, தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், பொது இடங்களில் பாதுகாப்பாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.நம் நாட்டில் என்.பி. 1.8.1., மற்றும் எல்.எப். 7., ஆகிய இரு புதிய கொரோனா வகைகள் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.இந்த இரு வகைகளையும் உலக சுகாதார அமைப்பு கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. இதுவரை இந்த வைரஸ் வகை, அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை