பஞ்சாபில் கொரோனா: 40 வயது நபர் பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சண்டிகர்: பஞ்சாபில் கொரோனா தொற்றுக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் உயிரிழந்தார். உத்தர பிரதேசத்தின் பிரோசாபாதை சேர்ந்த 40 வயது நபர் பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் வசித்து வந்தார். இவருக்கு திடீரென சுவாசக்கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து சண்டிகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.