உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விதிமீறும் பி.ஜி.,க்களுக்கு பூட்டு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

விதிமீறும் பி.ஜி.,க்களுக்கு பூட்டு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை

பெங்களூரு: 'விதிமீறலான பி.ஜி.,க்களுக்கு பூட்டு போடப்படும்' என, பெங்களூரு மாநகராட்சியின் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பான அறிக்கை:நகரில் எட்டு மண்டலங்களில் உள்ள பி.ஜி., எனும் பேயிங் கெஸ்ட் மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறோம். மாநகராட்சி நிர்ணயித்த விதிமுறைகளை பின்பற்றாதவை மூடப்படுகின்றன.நகரில் அதிகாரப்பூர்வமாக 2,193 பி.ஜி.,க்கள் உள்ளன. இவற்றில் 1,578 விடுதிகள் விதிமுறைகளை பின்பற்றுகின்றன; மற்றவை பின்பற்றவில்லை; விதிகளை மீறுவோருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.முறைப்படி லைசென்ஸ் பெறாமல், 2,320 விடுதிகள் இயங்குகின்றன. அனுமதி பெறாவிட்டாலும், 1,674 விடுதிகள் மாநகராட்சியின் விதிமுறைகளை பின்பற்றுகின்றன. மற்றவை பின்பற்றவில்லை. இத்தகையவைகளுக்கும், வர்த்தக லைசென்ஸ் பெறாத பி.ஜி.,க்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.நோட்டீஸ் அளித்தும், பலவற்றில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே ஆய்வு செய்கிறோம். விதிகளை மீறும் பி.ஜி.,க்களுக்கு பூட்டு போடப்படுகின்றன. இதுவரை 21 பி.ஜி.,க்களுக்கு பூட்டு போடப்பட்டு உள்ளது.

விதிமுறைகள் விபரம்

1. பி.ஜி.,க்களின் நுழைவாயில், வெளியேறும் வழி, வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடக்கும் காட்சிகளை பதிவு செய்யும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இதில் பதிவாகும் காட்சிகள் 30 நாட்கள் வரை, பாதுகாப்பாக வைக்க வேண்டும்2. கட்டடத்தில் அறைகளின் திறனுக்கு தகுந்த எண்ணிக்கையில் மட்டும், வாடிக்கையாளர்கள் தங்க அனுமதி அளிக்க வேண்டும்3. இங்கு தங்குவோருக்கு, சுகாதாரமான சூழ்நிலை, துாய்மையான கழிப்பறை, குளியலறை வசதி இருக்க வேண்டும்4. சுத்தமான குடிநீர் வசதி இருப்பது கட்டாயம்5. இதை நடத்துவோர் மூன்று மாதங்களுக்குள், மாநகராட்சியிடம் லைசென்ஸ் பெற வேண்டும்6. இங்கு தங்குவோரின் பாதுகாப்புக்காக, தினமும் 24 மணி நேரம், பாதுகாப்பு ஊழியர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.7. மாநகராட்சி வர்த்தக லைசென்ஸ் பெறுவதற்கு முன், அந்த கட்டடத்தில் தீ விபத்து பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தியது குறித்து, அதிகாரப்பூர்வ சான்றிதழ் பெற வேண்டும்8. இக்கட்டடங்களில் பெங்களூரு மாநகராட்சியின் சஹாய வாணி எண் 1533, போலீஸ் துறை உதவி எண் 101ஐ, அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்9. உரிமையாளர்கள் திடக்கழிவுகளை தரம் பிரித்து, அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ