உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் இணைந்தால் ஊழல்வாதிகளும் நல்லவர்கள்

பா.ஜ.,வில் இணைந்தால் ஊழல்வாதிகளும் நல்லவர்கள்

கலபுரகி, ஜன. 27-“பா.ஜ.,வில் இணைந்தால், ஊழல்வாதிகளும் நல்லவர்கள் ஆகிவிடுகின்றனர்,” என, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.கர்நாடகா ஊரக வளர்ச்சி அமைச்சர் பிரியங்க் கார்கே, கலபுரகியில் நேற்று அளித்த பேட்டி:எதிர்க்கட்சித் தலைவர்களை மிரட்ட, வருமானவரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யை மத்திய அரசு பயன்படுத்துகிறது. அந்த மூன்று துறைகளும், பா.ஜ.,வின் நட்சத்திர பிரசாரகர்கள். வருமானவரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., தான் பா.ஜ.,வின் பலம். பா.ஜ.,வுக்கு பலம் இருந்தால், எதிர்க்கட்சித் தலைவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்த ஏவாமல், லோக்சபா தேர்தலை சந்திக்கட்டும் பார்க்கலாம்.எதிர்க்கட்சியில் இருப்பவர்களை ஊழல்வாதிகள் என்று, பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். ஆனால் ஊழல்வாதி, பா.ஜ.,வில் சேர்ந்துவிட்டால், நல்லவர்கள் ஆகிவிடுகின்றனர்.'வருமானவரி, அமலாக்கத்துறை, சி.பி.ஐ.,யை உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்போம்' என, ஜெகதீஷ் ஷெட்டரை மிரட்டி மீண்டும், பா.ஜ.,வில் சேர்த்திருக்க வாய்ப்பு உள்ளது.தன்னை காங்கிரஸ் மரியாதையாக நடத்துகிறது என்று கூறியவர், திடீரென பா.ஜ.,வுக்குச் சென்றது ஏன்? லட்சுமண் சவதிக்கு, அமைச்சர் பதவி குறித்து, என்னிடம் எந்த தகவலும் இல்லை. முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை