உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாதபி புரி பூச் மீதான ஊழல் புகார்கள் ஆதாரமற்றவை: லோக்பால் அமைப்பு அறிவிப்பு

மாதபி புரி பூச் மீதான ஊழல் புகார்கள் ஆதாரமற்றவை: லோக்பால் அமைப்பு அறிவிப்பு

புதுடில்லி: செபி அமைப்பின் முன்னாள் தலைவர் மாதபி புரி பூச் மீதான புகார்களை முடித்து வைத்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது.சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியது. இதைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் முறைகேடுக்குப் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புரி பூச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டை ஹிண்டன்பர்க் முன்வைத்தது. இந்தக் குற்றச்சாட்டை மாதபி புரி பூச் மறுத்தார்.மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பிடம், மாதபி புரி பூச் மீது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவர் புகார் அளித்தனர்.இந்தப் புகார்கள் தொடர்பாக 4 வாரங்களில் விளக்கமளிக்குமாறு மாதபி புரி பூச்க்கு கடந்த நவம்பரில் லோக்பால் உத்தரவிட்டது. இந்தப் புகார்களை கடந்த டிச.19ம் தேதி லோக்பால் அமைப்பு மேலும் பரிசீலனை செய்தது. அப்போது தனது விளக்கம் அடங்கிய பிரமாண பத்திரத்தை மாதபி புரி பூச் தாக்கல் செய்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.இந்நிலையில், இன்று (மே 28) செபி அமைப்பின் முன்னாள் தலைவர் மாதபி புரி பூச் மீதான புகார்களை முடித்து வைத்து லோக்பால் அமைப்பு உத்தரவிட்டது. இது குறித்து லோக்பால் அமைப்பு கூறியதாவது: மாதபி புரி பூச் மீதான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அனுமானங்கள் அடிப்படையில் உள்ளன, அவை உறுதிபடுத்தப்படவில்லை. குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, ஆதாரமற்றவை. சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் அடிப்படையில், புகார்கள் தகுதியற்றவை. இவ்வாறு லோக்பால் அமைப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
மே 28, 2025 22:57

குஜராத் கலவர வழக்கை தீர்த்து வைத்தது போல் இதையும் முடித்து வைத்து விட்டனர்!


தாமரை மலர்கிறது
மே 28, 2025 21:33

மாதவி பூச் சிறந்த தேசப்பற்றாளர். நாணயமிக்கவர். நன்னடத்தை கொண்டவர். அவர் மீது ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளிவீசி களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள். சீனாவுடன் சேர்ந்துகொண்டு எதிர்க்கட்சிகள் தாக்குவது மாதவி பூச் அல்ல. அவர்கள் வேரோடு அழிக்க நினைப்பது இந்தியாவின் பங்கு சந்தையை தான். மீண்டும் மாதவி பூச்சை பதவிக்கு கொண்டுவரவேண்டும்.


K.n. Dhasarathan
மே 28, 2025 21:08

மாதவி புச் தானே ஒத்துக்கொண்டுள்ளார், தான் செபியில் வேலை செய்தபோது, ICICI வங்கியில் பனி புரிந்தாற்போல சம்பளம் வாங்கியுள்ளார். அது பொய்யா ? மகுவா மொய்த்தரா புகார் கொடுத்தபோது என்ன ஆதாரம் கொடுத்தார் ? அது எப்படி பொய்யானது ? லோகபால் அமைப்பு அறிவிப்பு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.


vadivelu
மே 29, 2025 16:09

No salary paid to Madhabi Buch after retirement, ICICI Bank rebuts Congresss claim. எங்க உரூட்டுறீங்க.. பாவமாதான் இருக்கு நீங்களும் 2014 ல் இருந்தே இதோ பூகம்பம் என்று கிளம்பி புஸ்வங்களை விட்டு வரீங்க .அவுங்களே ஒப்புக்கொண்டுள்ளாரா என்று கூசாம பொய் சொல்றீங்களே .


M S RAGHUNATHAN
மே 28, 2025 21:01

ஆதாரம் இல்லாமல் புகார் அளித்த திரிணமூல் பாராளுமன்ற உறுப்பினர் மேல் பாராளுமன்றம்.நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது உச்ச நீதி மன்றம் புகார் கொடுத்த மூவரையும் தன்னிச்சையாக suo moto அழைத்து அவதூறு சட்டத்தின் மூலம் தண்டனை அளிக்க வேண்டும்.


sankaranarayanan
மே 28, 2025 21:01

மாதபி புரி பூச் மீது திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவர் புகார் அளித்தனர். இது ஆதாரமற்றது என்று நிரூபணமானதால் புகார் கொடுத்த மூவர் மீதும் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 28, 2025 21:00

ஹின்டென்பேர்க் டுபாக்கூர், அவர் டிரம்ப் வந்தவுடன் கடைய மூடிட்டு போய்ட்டான், குற்றமுள்ள நெஞ்சு அதான்,டிரம்ப் அரசாங்கம் கண்டிப்பா அவன் மேல நடவடிக்கை எடுக்க எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன்.


Ramesh Sargam
மே 28, 2025 20:35

ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்தியவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும். ஏன் என்றால் அவர்கள் லோக்பால் அமைப்பின் பொன்னான நேரத்தை வீண் செய்திருக்கிறார்கள்.


vns
மே 28, 2025 20:27

மாதபி மீது குற்றம் சுமத்தியவர்களை சிறையில் தள்ளுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை