உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சித்தராமையா மீதான ஊழல் புகார்; ரூ.100 கோடி சொத்து முடக்கம்!

சித்தராமையா மீதான ஊழல் புகார்; ரூ.100 கோடி சொத்து முடக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா தொடர்புடைய 'மூடா' ஊழல் வழக்கில், 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதுவரை இந்த வழக்கில் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8nkk45hm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் அனுமதி அளித்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சித்தராமையா மீது அமலாக்கத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் இன்று (ஜூன் 10) சித்தராமையாவின் 100 கோடி ரூபாய் மதிப்புடைய 92 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த வழக்கில், இதுவரை 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 13:28

சித்துக்குட்டி ..சேர்மானம் அப்படி ...திஹாரில் விதவிதமான அயல்நாட்டு ரெசிபியை கொண்டு தயாரிக்கப்பட்ட களி உங்களுக்காக கிண்டிவைக்கப்பட்டுள்ளது ..


Thravisham
ஜூன் 11, 2025 05:32

ஊழல் விஞ்ஞானி குடும்ப கம்பெனி கட்சிய பாருங்க பார்த்துக் கத்துக்குங்க


தாமரை மலர்கிறது
ஜூன் 11, 2025 01:08

அடுத்த கெஜ்ரி இவர் தான். விரைவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 10, 2025 21:25

நினைவிருக்கட்டும் இவர் கருநாடக கருணா என்ற பெயர் பெற்றவராக நிரூபிப்பார்


Anantharaman Srinivasan
ஜூன் 10, 2025 18:53

மோடியே ஊழல் பேர்வழி என்று சொன்ன மகாராஷ்டிரா அஜித் பவார் கட்சி மாறி பிஜேபியை ஆதரித்தவுடன் துணை முதல்வராக ஆகிவிட்டார்.


Anantharaman Srinivasan
ஜூன் 10, 2025 18:47

எங்க நாயினா நாகேந்திரன் 4 கோடி பிளாக் மணி விவகாரரம் ஏன் அப்படியே அமுங்கிபோச்சு.?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 10, 2025 21:16

அட ..... அவரு செஞ்சதால இவரைக் கேள்வி கேட்கக்கூடாது ன்னு சொல்றீங்களோ ?


Anantharaman Srinivasan
ஜூன் 10, 2025 18:38

சித்தராமையாவிற்கு சூட்சுமம் போதலை. நம்ம முதல்வர் மாதிரி கில்லாடி ஆடிட்டர்கள் கைவசம் வைத்துக்கொள்ள வில்லை.


Ramasamy
ஜூன் 10, 2025 17:24

கர்நாடக கருணாநிதி


ram
ஜூன் 10, 2025 17:17

காங்கிரஸ் வீட்டிற்கு நாட்டிற்கு கேடு


என்றும் இந்தியன்
ஜூன் 10, 2025 17:00

வா வா ராமைய்யா சித்தம் கலங்கிய ராமையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை