உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் நீளமான கண்ணாடி பாலம்: ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறப்பு

நாட்டின் நீளமான கண்ணாடி பாலம்: ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விசாகப்பட்டினம்: நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் ஆந்திராவில் செப்டம்பர் 25ல் திறக்கப்படுகிறது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது.இந்த பாலம் ரூ.7 கோடியில் கட்டப்பட்டது, 55 மீட்டர் அளவு கொண்டது. இது கேரளாவின் வாகமோன் கண்ணாடி பாலத்தின் 38 மீட்டர் என்ற சாதனையை முறியடிக்கிறது. 40 மிமீ தடிமன் கொண்ட டெம்பர்டு லேமினேட் செய்யப்பட்ட ஜெர்மன் கண்ணாடி பேனல்களின் மூன்று அடுக்குகள் கொண்டு இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கண்ணாடி பேனல், 100க்கும் மேற்பட்ட மக்களைத் தாங்கும் மற்றும் ஒரு சதுர மீட்டருக்கு 500 கிலோ எடையுள்ள சுமைகளைத் தாங்கும். ஆனால், பாதுகாப்பு கருதி, கூட்டத்திற்கு ஏற்ற அனுபவத்தை உறுதி செய்வதற்காக, பார்வையாளர்கள் 40 பேர் கொண்ட ஒரு குழுவாக அனுமதிக்கப்படுவார்கள்.இந்த அமைப்பு மணிக்கு 250 கிமீ வேகத்தில் வீசும் காற்று மற்றும் சூறாவளியை தாங்கும். புயல்களை அடிக்கடி சந்திக்கும் கடலோர நகரத்தில் இது ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சமாகும். ஆந்திராவில் திறக்கப்பட உள்ள இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம், விசாகப்பட்டினத்தின் புதிய அடையாளமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

அநிருத்
செப் 10, 2025 17:59

கன்னியாகுமரியில் இருக்கும் கண்ணாடி பாலம் 77மீ நீளமானது. https://kanniyakumari.nic.in/glass-bridge/ ஆனால் இது 55மீ தான். இது எப்படி நாட்டின் நீளமான கண்ணாடி பாலமாகும்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 10, 2025 15:48

மெரீனா கடற்கரை மயானத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் கடலில் கருணாநிதி சிலையும் திரை கதை வசனம் எழுதுவது போன்று ஒரு பிரமாண்ட சிலை 100 மீட்டர் உயரத்துக்கு அமைத்து அதை மக்கள் போய் பார்ப்பதற்கு 150 மீட்டர் உயரத்தில் 600 மீட்டர் நீளத்தில் ஐநூறு பேர் ஒரே தடவை சென்று பார்க்கும் படி கண்ணாடி பாலம் அமைத்தால் சமூக நீதி கிடைத்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அப்படியே கடற்கரை மயானத்தை விரிவு படுத்தி திராவிட கட்சிகள் குடும்ப அங்கத்தினர்களுக்கு பிரித்து பட்டா போட்டு கொடுத்து விட்டால் எதிர் காலத்தில் கோர்ட் கேஸ் நீதிபதியை நடு இரவில் எழுப்பி இரவோடு இரவாக எல்லா வழக்குகளும் வாபஸ் பெற வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.


Nellai Ravi
செப் 10, 2025 14:29

கன்னியாகுமாரி பாலம், 30 கோடியில் கட்டப்பட்டது.


Vasan
செப் 10, 2025 13:45

This must be load ed by Certifying body, which must be validated by professors from IITs/IISc, before dedicating to the Nation. Safety first.


N Sasikumar Yadhav
செப் 10, 2025 11:34

நாட்டின் மிகப்பெரிய கண்ணாடி பாலம் கட்ட 7 கோடி ரூபாய் தமிழக திராவிட மாடல் கட்டிய உடைந்த கண்ணாடி பாலம் எவ்வளவு தொகையில் கட்டப்பட்டது .


V RAMASWAMY
செப் 10, 2025 11:13

ஏற்கனவே கன்யாகுமரியில் கண்ணாடி பலம் சேதமடைந்துவிட்டது. அதி கடினமான கான்க்ரீட் , இரும்பு பாலங்களே இடிந்து அழிந்துபோகும் நிலையில் இம்மாதிரி உடையக்கூடிய கண்ணாடி பாலங்கள் அமைத்து விஷப்பரீக்ஷைகள் தேவையா?


visu
செப் 10, 2025 19:19

இவையெல்லாம் சுற்றுலா மேம்பாட்டுக்காக செய்வது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை