உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யானை தந்தம் வைத்துக்கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது ஐகோர்ட்

யானை தந்தம் வைத்துக்கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் வீட்டில், யானை தந்தம் வைத்துக்கொள்ள கேரள அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந் த, 2011, ஆகஸ்ட் மாதம், எர்ணாகுளம் தேவரா பகுதியில் அமைந்துள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வனத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிலிருந்து யானை தந்தம் கண்டெடுக்கப்பட்டது. யானை தந்தம் வைத்துக் கொள்வதற்கான உரிமம் அப்போது மோ கன்லாலிடம் இல்லை. பின்னர் கேரள அரசுக்கு மோகன்லால் சமர்ப்பித்த மனுவை தொடர்ந்து, யானை தந்தம் வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை, 2015-ல் மாநில அரசு வழங்கியது. இதை எதிர்த்து வனவிலங்கு ஆர்வலர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கேரள அரசு, 2015-ல் மோகன்லாலுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக அரசின் கெசட்டில் அறிவிப்பு வெளியிடவில்லை. இது கேரள அரசின் தவறு. எனவே, யானை தந்தம் வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்கிறோம்' என, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ram pollachi
அக் 25, 2025 10:58

யானை முடி மோதிரம்... ஒரு தடை வரும் என்று எதிர்பார்க்கலாம்.


Anand
அக் 25, 2025 10:43

2011 ஆம் ஆண்டு நடத்திய சோதனையில் உரிமம் இல்லாமல் தந்தம் வைத்திருந்தார், 2015 ஆம் ஆண்டு தந்தத்தை வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டது, அப்படியானால் உரிமம் பெறுவதற்கு முன்பாக தந்தத்தை வைத்திருந்தது குற்றமில்லையா? அதற்கு தண்டனை ஏதும் கிடையாதா?


Easwar Kamal
அக் 25, 2025 00:20

எல்லா மலையாளத்தானுங்களும் பணத்தை வச்சிக்கிட்டு என்ன செய்யலாம்னு தெரியாம தந்ததை வாங்கவா யானையை வாங்கவனு allyuranuva. ஒரு காலத்தில் இவனுங்க சமபலம் எல்லாம் தமிழ் நடிகரின் 3 வரிசையில் உள்ள நடிகர்கள் வாங்கும் சம்பளம் பெற்றார்கள். இப்போது எல்லோருடைய சமபலம் எகிறி உள்ளது அதனாலா என்ன செயலாம்ணு தெரியாம பித்து பிடிச்சு அலயராணுவ .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை