உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதாக்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., ஆளும் மாநிலங்கள் வாதம்

மசோதாக்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ., ஆளும் மாநிலங்கள் வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியாது. அந்த அதிகாரம், ஜனாதிபதி, கவர்னர் களுக்கு மட்டுமே உள்ளது' என, மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில், பா.ஜ., ஆளும் மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்துள்ளன.சட்டசபைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.விசாரணை இந்த உத்தரவின் மீது, 14 கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி இருந்தார். இதை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.நான்காவது நாளாக நேற்றும் விசாரணை நடந்தது. அப்போது, பா.ஜ., ஆளும் மஹாராஷ்டிரா மாநில அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்:முதலில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க, கவர்னர் மறுப்பதற்கான சூழலை யாரும் வரையறுக்க முடியாது. அது, கவர்னரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.மேலும், இத்தகைய விவகாரங்களில் நீதித்துறை மறு ஆய்வு செய்வது என்பது, மறைமுகமானதாக தான் இருக்க வேண்டுமே தவிர நேரடியாக தலையிட முடியாது.மேலும், மத்திய அரசின் வரம்புக்குள் தான், மாநில அரசு மசோதாவை உருவாக்குகிறது என்றால், அரசியலமைப்பு பிரிவு 201ஐ பயன்படுத்தி, அதை கவர்னர், ஜனாதிபதி நிராகரிக்க அதிகாரம் இருக்கிறது.அரசியல் சாசன பிரிவு 200ஐ தனியாக படிக்காமல், பிரிவு 254 உடன் சேர்த்து படிக்க வேண்டும். மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் விவகாரத்தில், ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு இருக்கும் அதிகாரம் என்பது பிரத்யேகமானது. இவ்வாறு வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், ''மசோதாவை கால வரம்பின்றி நிறுத்தி வைக்கும் போது, அதற்கான காரணத்தை நீதிமன்றம் கேட்க முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

ஒத்திவைப்பு

இதற்கு பதில் அளித்த மஹாராஷ்டிரா அரசு தரப்பு வழக்கறிஞர், 'நீதிமன்றங்கள் அவ்வாறு கேட்க முடியாது; மாறாக கவர்னர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று வேண்டுமானால் கேட்கலாம்.'கவர்னர் நிபந்தனைக்கு உட்பட்டு செயல்பட்டாரா என, கோப்புகளை ஆராய்ந்து பார்க்க மட்டுமே நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது. மாறாக அவர் என்ன முடிவு எடுத்தார்? ஏன் அந்த முடிவை எடுத்தார் என்ற விளக்கங்களை நீதிமன் றங்களால் கேட்க முடி யாது' என, பதிலளித்தார்.மத்திய அரசுக்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங் வாதிடுகையில், ''எல்லா நோய்களுக்கும் உச்ச நீதிமன்றம் மட்டுமே மருந்தாக இருக்க முடியாது.''சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்க ளுக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க முடியாது. அந்த அதிகாரம், ஜனாதிபதி, கவர்னர்களுக்கு மட்டுமே உள்ளது,'' என்றார்.ஹரியானா, கோவா உள்ளிட்ட பா.ஜ., ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர்களும், மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன் வைத்தனர். நேற்றைய அலுவல் நேரம் முடிந்ததையடுத்து, வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

N Srinivasan
ஆக 28, 2025 13:18

ஜனாதிபதி முடிவு எடுக்காமல் இருந்தால் அதை நீதி மன்றம் கையில் எடுக்காமல் அதை உடனே பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்


ManiMurugan Murugan
ஆக 28, 2025 00:16

ManiMurugan Murugan ஒரு மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரிடம் சென்றால் அதை அவர் உடனே வா சித்தார்த் அவர் சம்பந்தப்பட்ட துறை யிடம் ஆலோசித்து தான் பிறகு நடவடிக்கை எடுக்க முடியும் நீதிமன்றம் ஒவ்வொரு துறையாக ஆலோசிக்குமா கவர்னர் அதி விந்து மட்டுமல்ல யா ரி தொடருந்து வந்தாலும் பதி வே டி ல் பதிவேற்ற ப் படும் இவ்வளவு வரை துறையின் ஒப் போது கவர்னர் ஜனாதிபதி க்கு காலக்கெடு கொடு ப் பவர் கள் அரசின் எல்லாத் துறைக்கும் நீதி துறை க்கும் காலக்கெடு நீதிமன்றம் கொடுத்து நடைமுறை படுத்துமா


M Meganathan
ஆக 27, 2025 19:44

மூல காரணம் - தாமதம். எங்கெல்லாம் தாமதம் நிகழ்கிறோதோ அங்கெல்லாம் பிரச்சனைகள் உருவாகும். தாமதத்தை நிவர்த்தியானால் சுமுக உறவு ஏற்படும்.


T.sthivinayagam
ஆக 27, 2025 14:26

நிதி நீதி ஆன்மீகம் கல்வி ஒரே சமுகத்தில் குவியாமல் இருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு மிக அவசியம் என்று கூறுகிறார்கள்


vivek
ஆக 27, 2025 18:46

கல்விக்கு கொடுக்கும் காசை திருடி திங்க கூடாது என்று திருட்டு திராவிடம் கிட்ட சிவநாயகம் சொல்கிறார்


joe
ஆக 27, 2025 13:07

மக்களாட்சியில் உள்ள நெறி முறைகளை நீதிதுறையினர் மாற்ற முயலக்கூடாது .சிவில் சட்டங்களை வேண்டுமானால் ஒழுங்கு படுத்துங்கள் .மசோதா என்பது நல்லது, கெட்டது போன்ற ரெண்டு விஷயங்கள் அடங்கியது. அரசியல்வாதிகள் நாட்டை ஏமாற்றி தேச துரோக செயலுக்கு அனுமதிப்பது நீதி துறையின் வேலை இல்லை. அரசியல் வாதிகள் மசோதா மூலம் ஊழலை அதிகரித்து தேச ஒற்றுமையையும் சீர்குலைக்க வழி உள்ளது. சிவில் சட்டங்களில் உள்ள குறைகளையே நீதித்துறையினர் சீர்படுத்தவேண்டும்.. வாழ்க பாரதம் ...வளர்க ஒற்றுமை


Ravishankar
ஆக 27, 2025 11:09

நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை ஆளுநரோ அல்லது ஜனாதிபதியோதான் நிறுத்த முடியும். ஆளுனருக்கோ ஜனாதிபதிக்கோ ஆணையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 27, 2025 11:05

பேரம் படியாமலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தீர்ப்பு வழங்கப்படாமல் உயர் நீதி மன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் வழக்குகளை தூசு தட்டி எடுத்து சட்டமன்ற சபாநாயகர் முன்னிலையில் சீட்டு குலுக்கும் முறையில் தீர்ப்பு வழங்கும் மசோதாவை தயாரித்து ஆளுநருக்கு அனுப்பி அவர் ஒப்புதல் அளிக்காத பட்சத்தில் மசோதாவை உயர்நீதி மன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் மூலம் மசோதாவுக்கு ஒப்புதல் என்ற பெயரில் தீர்ப்பு வழங்கும் முறையை கொண்டுவரலாமா யுவர் ஆனர் ?


Anand
ஆக 27, 2025 11:00

உச்ச நீதிபதிகள் வானத்தில் இருந்து குதித்தவர்கள், அவர்கள் தான் கேள்வி கேட்கணும், முடிவும் செய்யணும், திருப்பி அவர்களை யாரும் கேள்வி கேட்கக்கூடாது, கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள்...


Balamurugan
ஆக 27, 2025 10:07

நீதிமன்றங்கள் வழக்கை இழுத்தடித்தால் அதில் கவர்னரோ ஜனாதிபதியே தலையிட்டு தீர்ப்பை வழங்கிவிடலாமா? இந்த கேள்விக்கு இன்னும் நீதிபதிகளிடம் இருந்து பதில் வரவில்லை. நீதிபதிகளின் நம்பக தன்மையை இழந்து விட்டார்கள்.


Swaminathan L
ஆக 27, 2025 09:53

இந்திய அரசியல் சாசனத்தின்படி மாநில அமைச்சரவை செயல்பாடு with the pleasure of the Governor என்பதன் அடிப்படையில் தான் நெறிப்படுத்தப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவை கொண்டுவரும் சட்டங்களில் ஷரத்துகள் ஏதேனும் நிர்வாக, சட்டச் சிக்கல்களை உண்டுபண்ணுவதாக இருந்தாலோ அல்லது மக்களுக்கு எதிர்மறை பலன்களை உண்டாக்குவதாக இருந்தாலோ அல்லது வேறு எந்த தகுதியான காரணமிருந்தாலும் ஆளுநர் அது பற்றிய குறிப்புகளை எழுதி மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அமைச்சரவைக்குத் திருப்பி அனுப்பினால், அதைப் புறந்தள்ளி சட்டத்தை மறுபடியும் அப்படியே மாறுதல்கள் எதுவும் செய்யாமல் இயற்றி ஆளுநரிடம் அனுப்பி அவர் இரண்டாம் முறை மறுதலிக்க முடியாது, அதற்கு அப்படியே ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என்று அழுத்தம் தருவது சரியல்ல. ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில்களைத் தந்து அவரை ஒப்புக்கொள்ளச் செய்வதே நிர்வாக ரீதியில் சரியானது.


சமீபத்திய செய்தி