உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,யில் பெண்களுக்கு இடஒதுக்கீடு; மத்திய அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

பார்லி.,யில் பெண்களுக்கு இடஒதுக்கீடு; மத்திய அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஒப்புதல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, கடந்த 2023 செப்., 20ல் லோக்சபாவிலும், 21ல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டு, செப்., 28ல் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று சட்டமானது. ஆனால், 'நாடு முழுதும் தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின்தான் பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறையை அமல்படுத்த முடியும்' என, மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், '2024 பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாக, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்' என, காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்குர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று வி சாரணைக்கு வந்தது. அப்போது, 'புதிதாக தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யும் வரை காத்திருக்காமல், பெண்கள் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என, மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. வலியுறுத்தல் அப்போது பேசிய நீதிபதிகள், 'இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரை கூட அரசியல் மற்றும் சமூக ரீதியில் சமதர்மத்தை வலியுறுத்துகிறது. 'நம் தேசத்தில், 48 சதவீதமாக உள்ள பெண்கள் மிகப்பெரிய சிறுபான்மையினராகத்தான் இருக்கின்றனர். இந்த மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்' என, உத்தரவிட்டனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D Natarajan
நவ 11, 2025 08:03

இதே முறையை நீதி துறையில் ஏன் அமுல் படுத்தக்கூடாது


G Mahalingam
நவ 11, 2025 08:00

சட்டம் போட்டுதான் அமல் படுத்துவேன் என்று காங்கிரஸ் திமுக அடம் பிடிக்க கூடாது. சட்டம் இல்லாமலும் 100 சதவீதம் பெண்களுக்கு கொடுக்கலாம். இதை எதிர்க்க‌முடியாது.


GMM
நவ 11, 2025 07:12

தொகுதி மறுவரையறை பணிகள் முடிந்தவுடன் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறை. இதில் வழக்கு போட விசாரிக்க அவசியம் இல்லை.? புதிதாக தொகுதி மறுவரையறை முடியும் முன் அரசை விட காங்கிரஸ் போன்ற கட்சிகள் பெண்கள் இட ஒதுக்கீட்டை உடன் அமுல்படுத்த முடியும். வெட்டி வழக்கு.


தமிழ் மைந்தன்
நவ 11, 2025 07:29

காங்கிரஸ் மற்றும் ஊழல் திமுக உள்ளவரை கொலை கொள்ளை பாலியல் கொடுமை திருட்டு உருட்டு ஏமாற்றுதல் மோசடி போன்றவை நடக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை