உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  தமிழகத்திற்கான கல்வி நிதி கோரிய வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

 தமிழகத்திற்கான கல்வி நிதி கோரிய வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை, மத்திய அரசு உடனடியாக வழங்கும்படி உத்தரவிடக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'புதிய கல்வி கொள்கையை ஏற்காததால், தமிழக அரசுக்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் உள்ளது. 'குறிப்பாக, மத்திய அரசு வழங்க வேண்டிய 2,151.59 கோடி ரூபாய் கல்வி நிதியும், அதற்கான 6 சதவீத வட்டி 139.70 கோடி ரூபாயும் சேர்த்து, 2,291 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்ட இருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி சந்துருகர் அமர்வில், இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில், “2001ம் ஆண்டிலிருந்து கல்வி நிதியை மத்திய அரசு தராமல் இழுத்தடிக்கிறது. இதனால், தமிழகத்தில் 43 லட்சம் மாணவர்களும், 2 லட்சத்து 21,000க்கும் அதிகமான ஆசிரியர்களும், 32,000 கல்வித்துறை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். “மேலும், 2,151 கோடி ரூபாய் தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி இடைக்கால மனு தாக்கல் செய்து உள்ளோம். அதன் மீது உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,” என்றார். மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசின் மனு மீது மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், 'இடைக்கால மனு மீதான விசாரணை மூன்று வாரத்திற்கு பின் எடுத்துக் கொள்ளப்படும்' என்று அறிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி