உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் குடியுரிமை மனு அரசுக்கு கோர்ட் கேள்வி

ராகுலின் குடியுரிமை மனு அரசுக்கு கோர்ட் கேள்வி

லக்னோ,பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ள, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக் கோரும் மனு மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர் விக்னேஷ் சிஷிர் என்பவர், காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 'ஐரோப்பிய நாடான பிரிட்டனின் குடியுரிமையை ராகுல் பெற்றுஉள்ளார். இந்திய சட்டங்களின்படி, இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அதனால், ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்' என, அவர் மனுவில் கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணையும் கேட்டிருந்தார். உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை, இந்த மனுவை முன்பு ரத்து செய்திருந்தது. குடியுரிமை சட்டத்தின் கீழ், வழக்கு தொடர அனுமதித்திருந்தது. இதற்கிடையே, ராகுலின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி, விக்னேஷ் சிஷிர், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, விக்னேஷ் சிஷிர் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், டிச., 19ல் அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

M Ramachandran
டிச 11, 2024 05:29

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தாக்கு மூக்கு டிக்கு தாளம்.


Sekar
நவ 27, 2024 10:16

சுதந்திர இந்தியாவில் மிக முக்கியமான தீர்ப்புகளை, இதுவரை அவர்கள் சொன்ன தீர்ப்புகளெல்லாம் பெரிய பெரிய மாற்றங்களை கொண்டுவந்திருகின்றது என கருதபடும் அலகபாத் நீதிமன்றம் நேற்று ஒரு விஷயத்தை சொன்னது அது அய்யா ராகுலாரின் லண்டன் குடியுரிமை தொடர்பான தகவலகளை தரவேண்டும் என மத்திய உள்துறைக்கு உத்தரவிட்டுள்ளது இது ராகுலாருக்கு சிக்கலான விஷயம் இந்தியர்கள் அதாவது இந்தியாவில் பிறந்து வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு குடியுரிமை இந்திய குடியுரிமை மட்டுமே உண்டு என்பது சட்டம், அதை மீறி இன்னொரு நாட்டில் குடியுரிமை வைத்திருத்தல் தண்டனைகுரிய குற்றம் அதுவும் நாட்டின் எதிர்கட்சி தலைவர் அப்படி இருந்தால் அது நாட்டின் இறையாண்மைக்கும் அரசியல் அமைப்புக்கும் எதிரானது இப்போது மத்திய உள்துறைக்கு நீதிமன்றம் அதிமுக்கியமான இந்த விவகாரத்தில் உடனே தகவல்தர கோருகின்றது, இந்த துறையின் அமைச்சர்தான் அய்யா அமித்ஷா ஆக விவகாரம் எங்கு செல்கின்றது என்பதை அவதானிக்க முடிகின்றது, அய்யா ராகுலார் காற்றுபோன பலூன் போல் கிடப்பது இதனால்தான் மடியில் கனமில்லை என்றால் நேற்றே ராகுலார் பொங்கியிருப்பார், ஆனால் இப்போது அன்னார அமைதி என்பதால் விவகாரம் சிக்கலானது என்பதை அவதானிக்கலாம் இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் பிரியங்காவினை அவசரமாக களமிறக்கினார்களோ என்னவோ, இனி அவருக்கான குடியுரிமையினை அவசரமாக தேட வேண்டும்


Ganapathy Subramanian
நவ 27, 2024 09:54

இங்கே யாரும் போலி பாஸ்போர்ட் என்று சொல்லவில்லையே. இந்தியாவில் இரட்டை குடியுரிமை கிடையாது என்பதால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவருக்கு இந்திய குடியுரிமையை ரத்து செய்ய சொல்கிறார்கள், அவ்வளவுதான். அவர் இங்கிருந்து வெளியேறும் போது இந்திய பாஸ்போர்ட்டையும் இங்கிலாந்தில் நுழையும்போது அந்த நாட்டு பாஸ்போர்டையும் உபயோகித்து இருந்தால் நீங்கள் சொன்ன முறைப்படி ஆராய்வது கடினம். ஓமன், யுஏஇ போன்ற நாடுகளில் வேலை செய்பவர்கள் அந்த நாடுகளின் ரெசிடெண்ட் கார்ட் வைத்து இருந்தால் அவர்கள் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் அடிக்காமல் ஈ கேட் மூலமாக சென்று வரலாம்.


Rpalnivelu
நவ 27, 2024 08:52

பட்டாயா பாபுவுக்கு எத்தனை பாஸ்போர்ட் உள்ளது? சீனாவின் பாஸ்போர்டும் இருக்கும், நல்ல தேடித் பாருங்க


karthik
நவ 27, 2024 08:46

ரத்து செய்து துரத்தி விடுங்க


வாய்மையே வெல்லும்
நவ 27, 2024 08:14

இருக்கவே இருக்காரு ராவுல் கானின் அமெரிக்கர் உங்க கார்ப்பரேட் நண்பர் ஜீர்ஜுசோரியாசிஸ் உங்களோட தோஸ்து வெளிநாட்டில் வசித்து கிழிஞ்ச மந்தார இலையில் உப்புசப்பில்லாத நீர்க்க கூழ் ஊற்றுவார் . உறிஞ்சு பிழைத்த போங்க.


பேசும் தமிழன்
நவ 27, 2024 07:52

இரட்டை குடியுரிமை பெற்ற பப்பு வை... இந்திய குடியுரிமையை பறித்து.... நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்...... அவர் என்றுமே நாட்டுக்கு எதிரான பேச்சுக்களை தான் பேசி கொண்டு திரிகிறார்.


ஆரூர் ரங்
நவ 27, 2024 07:44

காங்கிரசை அழித்தால் அந்த வெற்றிடத்தை இன்னும் மோசமான பிரிவினைவாத கட்சிகள் பிடிக்கும் என்ற பயம் பிஜெபி யிடம் உள்ளது. எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று பார்க்கும் நிலைமை.


Anand
நவ 27, 2024 06:27

இவன் ஒரு பொய் பேசும் திருடன்


ராமகிருஷ்ணன்
நவ 27, 2024 06:22

இவனின் பேச்சு, செயல் எதுவும் இந்தியாவுக்கு விசுவாசமாக இல்லை. முஸ்லிம்களின் தீவிரவாதிகள் சார்பாக பேச்சு உள்ளது. ஷியா, சன்னி எந்த பிரிவு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை