உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு கோர்ட் அனுமதி மறுப்பு

பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு கோர்ட் அனுமதி மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு அனுமதி மறுத்த கோர்ட் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், இவர் மீது நிலக்கரி சுரங்கம், மற்றும் நில மோடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து நேரில் ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு 8 முறை சம்மன் அனுப்பியது. ஆஜாராக நிலையில் கடந்த ஜன.31ம் தேதி கவர்னரை சந்தித்து முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அளித்தார்.உடனே அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கினார். இவரது கோர்ட் காவல் பல முறை நீட்டிக்கப் பட்ட நிலையில் மீண்டும் ராஞ்சி பி.எம்.எல்., சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படார். அவரை பிப்.22 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் அதே கோர்ட்டில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனு செய்தார். இந்நிலையில் கோர்ட் காவல் இன்று நிறைவடைந்தையடுத்து, மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தன்னை பங்கேற்க அனுமதி கோரி மனு செய்தார். அனுமதி தர நீதிபதி மறுத்ததுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

duruvasar
பிப் 23, 2024 15:46

பட்ஜெட்டை விடுங்க ஐயா , கொழுந்தியாளுக்கு சடங்கு செய்யணும் அதற்காகவாது அனுமதி கொடுங்கள் ஐயா இந்த வேண்டுகோளின் உண்மைத்தன்மையை என் வழக்கறிஞர் கபில் சிபல் விளக்குவார்.


Yaro Oruvan
பிப் 22, 2024 22:16

ஹா ஹா இவுரு போயி கிழி கிழி கிழின்னு கிழிக்கலன்னா பட்ஜெட் கிழியாது.. திருட்டு கும்பல்.. எங்கூர் சைடுல ஒரு சொலவட இருக்கு.. மொசப்பிடிக்கிற நாயி மூஞ்சிய பாத்தா தெரியாதா ????


மேலும் செய்திகள்







புதிய வீடியோ