உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்; சுப்ரீம்கோர்ட் அதிருப்தி

சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்; சுப்ரீம்கோர்ட் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்'' என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.பெண் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்து யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கேரளா பத்திரிகையாளருக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, இன்று (ஜூலை 26) நீதிபதிகள் நாகரத்னா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் அரசியல்வாதி ஒருவரை விமர்சித்து யூடியூப் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கேரள பத்திரிகையாளருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், நீதிபதிகள் கூறியதாவது:* யூடியூப் வீடியோக்கள் நீதிமன்ற செயல்முறைக்கு மாற்றாக இருக்க முடியாது. * தீர்ப்பு வழங்குவதற்கு நீதிமன்றங்கள் உள்ளன. யூடியூப் வீடியோ மூலம் கருத்தை திணிக்க முடியாது.* யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.* சமூக வலைதளங்களில் பேசப்படும் எதிர்மறையான விஷயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.* ஊழல் எதிர்ப்பு பெயரில் யாருடைய புகழையும் பாதிக்கும் வகையில் செயல்பட முடியாது.விமர்சிப்பது சட்டத்தின் கண்ணோட்டத்தில் தவறானது.* ஊழலை எதிர்ப்பதாக கூறி அவதூறு கருத்து பரப்ப சமூக வலைதளங்களை பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajasekar Jayaraman
ஜூலை 26, 2025 22:37

நீங்களும் உங்களுமேலே உள்ள நம்பிக்கையை வீணடிக்கிறீர்கள்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 26, 2025 20:10

நீதிமன்றங்களை சில நீதிபதிகள் தவறாக பயன்படுத்துகிறார்கள் அவர்களை என்ன செய்யலாம் கணம் நீதிபதிகளே.....!!!


Ganesan Govindaraju
ஜூலை 26, 2025 18:46

நீதிபதிகளை விமர்சிக்காதவரை அது கருத்துச் சுதந்திரம். பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு சட்டம் வேறு.சாதாரண மக்களுக்கு சட்டம் வேறு. இதுதான் இன்றைய நிலை. எல்லோருக்கும் சமநீதி என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 26, 2025 18:17

கையாலாகாத உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றங்களும் புழுத்து போன இபிகோ சட்டங்களை வைத்துகொண்டு அதிருப்தி தான் கொள்ளமுடியும் வேறு எதுவும் நடந்து விடாது.....!!!


c.mohanraj raj
ஜூலை 26, 2025 14:55

சுப்ரீம் கோர்ட் தவறான பாதையில் செல்கிறது என்று மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் மாண்புமிகு ஜனாதிபதி திரௌபதி முர்முகா அவர்கள் கேட்ட 14 கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லையா அப்படி என்றால் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிற்கு செல்லவும்


Selvaraj Thiroomal
ஜூலை 26, 2025 14:43

Disclaimer வாய்ப்புகளை அந்த ஊடகங்கள் நீக்கிவிட்டால் சற்று கவனமாக பதிவிட மக்கள் முன்வருவார்கள். தேவையில்லாமல் வெளிநாட்டு ஊடகங்களை நமது பஞ்சாயத்திற்கு இழுத்து கோர்ட்டின் நேரத்தை வீணாக்கி வருகிறார்கள், வாய்ப்பை கொடுத்து விட்டு அவர்களும் அல்லாடுகின்றனர்.


GMM
ஜூலை 26, 2025 13:45

சமூக ஊடகங்களுக்கு லைசென்ஸ் வழங்க மத்திய அரசு அமைப்பு கட்டாயம் தேவை . விதிகள், தண்டனை , அபராதம் விதிக்கும் சட்டம் தேவை . நீதிபதிகளுக்கு பணி, பதவி உயர்வு, பதவி இறக்கம் .. போன்ற நிர்வாகம் விதிகள் தேவை . தீர்ப்பு , ஜாமின் அப்பீல் .. மீது அரசு தணிக்கை தேவை . ஜனாதிபதி மாளிகை தணிக்கை விதிக்கு உட்படும் போது நீதிமன்றம் CAG,தணிக்கையை தவிர்ப்பதை எப்படி மத்திய அரசு மற்றும் மாநில நிர்வாகம் அனுமதிக்கிறது. ?


Nagarajan D
ஜூலை 26, 2025 13:13

நீதிமன்றங்களே நீதியை தவறாக பயன்படுத்துகிறதே? பணப்பெட்டிகளை வாங்கி கொண்டு வாய்தா கொடுத்தும் ஜாமீன் கொடுத்தும்.. இதற்க்கு முதலில் கேவலப்படுங்கள் பிறகு சமூக ஊடகங்களை பற்றி கவலை படலாம்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 26, 2025 12:41

நீதிமன்றங்களையே பெரும்பாலும் தவறாக பயன்படுத்துகிறார்களே? எங்கே போய் முட்டிக்கொள்வது?


புதிய வீடியோ