உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,491 ஆக உயர்வு; 24 மணி நேரத்தில் கேரளாவில் 143 பேருக்கு உறுதி

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,491 ஆக உயர்வு; 24 மணி நேரத்தில் கேரளாவில் 143 பேருக்கு உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை 6,491 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் புதிய கொரோனா வகை தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தினமும் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 358 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 6,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதித்து யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கேரளாவில் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, 1950 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியா முழுவதும் நேற்று 624 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாஸ்க் அணியும் படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
ஜூன் 09, 2025 15:19

கொரோனாவெல்லாம் பளசு. இதுக்கெல்லாம் ஒன்றிய அரசு தலையிடாது


Ramesh Sargam
ஜூன் 09, 2025 11:45

இதுவரை கொரோனா தொற்று பரவலை தடுத்து நிறுத்த அரசு என்ன முயற்சி எதித்திருக்கிறது என்கிற செய்திகள் வந்ததாக தெரியவில்லை.


முக்கிய வீடியோ