உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு

மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேர் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது.கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அனைவரும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்தியாவில் நேற்று (ஜூன் 05) ஒரே நாளில் மட்டும் 498 பேர் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் இதுவரை 5,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்தது.நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் நான்கு பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

vijai hindu
ஜூன் 06, 2025 13:52

ஒரே நாளில் ஒரே நாளில் என்று பயமுறுத்த வேண்டாம்


Nada Rajan
ஜூன் 06, 2025 13:18

கொரோனா பாதிப்பு மக்கள் பீதி அடைய வேண்டாம்.. பரவ வாய்ப்பு இல்லைங்க


முக்கிய வீடியோ